வேட்பாளர் குடும்பத்தார் மீதுள்ள வழக்கு, தண்டனை விபரமும் வேட்பு மனுவில் அவசியம்: தேர்தல் கமிஷன் தகவல்| Dinamalar

வேட்பாளர் குடும்பத்தார் மீதுள்ள வழக்கு, தண்டனை விபரமும் வேட்பு மனுவில் அவசியம்: தேர்தல் கமிஷன் தகவல்

Added : மார் 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை: "லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளரின் கணவர், மனைவி, மகன், மகள் மீதுள்ள வழக்கு, தண்டனை பெற்ற விபரங்களும் இடம்பெறவேண்டும்,” என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில், லோக்சபா தேர்தல், ஏப்.24ல் நடைபெற உள்ளது. இதற்கான, வேட்பு மனு தாக்கல், மார்ச் 29 முதல் துவங்குகிறது. கடந்த தேர்தல் வரை, வேட்பு மனு தாக்கலின் போது, படிவம் 26ல் வேட்பாளர்கள் 'பயோடேட்டா', அசையும் அசையா சொத்துக்கள், குற்ற வழக்குகள், உறுதி மொழி சான்றுகள் போன்றவற்றை தனித்தனியாக வழங்க வேண்டும் என, இருந்தது.


ஒருங்கிணைந்த படிவம்:

வரும் லோக்சபா தேர்தலில், வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர்கள் தங்கள் விபரங்களை தனித்தனியாக வழங்காமல், ஒருங்கிணைக்கும் வகையில், 'வேட்பு மனு' தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர், ரூ.20 ஸ்டாம்ப் பத்திரத்தில், மனுவை தயார் செய்து, பெயர் மற்றும் பயோடேட்டா, மனைவி, குழந்தைகளின் பெயர், விபரம், அவர்களது 'பான் கார்டு' எண்கள், போலீசில் உள்ள வழக்கு, தண்டனை, வங்கியில் உள்ள 'டெபாசிட்' உள்ளிட்ட விபரங்கள், அசையும், அசையா சொத்துக்கள் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும். இதுதவிர, கணவர், மனைவி, மகன்கள், மகள்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை பெற்றிருந்தால் அதன் விபரம், போன்றவற்றை ஒளிவு மறைவின்றி வழங்கவேண்டும். வேட்பு மனுவில், விபரங்கள் முழுமையில்லாமல் இருந்தால், மனுவை தள்ளுபடி செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு முழு அதிகாரம் உண்டு, என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X