இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலை துண்டிப்பு| Dinamalar

இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலை துண்டிப்பு

Added : மார் 30, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலை துண்டிப்பு

ரியாத்: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு, சவுதி அரேபிய அரசு, 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது. சவுதி அரேபியாவில், நுரா அல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த, சேத்தினாஹ் பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.
முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச் சென்றது தொடர்பாக, கடந்த 2007ம் ஆண்டு, ஜூமாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம், 14ம் தேதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்ட ஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து, மரண தண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதி நீதிமன்றம், "இரு வாரங்களுக்குள், இந்தத் தொகையை கொடுத்தால், பெண்ணின் மரண தண்டனை நிறுத்தப்படும்; இல்லை எனில், மரண தண்டனை நிறைவேற்றப்படும்' என, கூறியுள்ளது.
ஆனால், 11 கோடி ரூபாய் இல்லாததால், ஜூமாதியின் குடும்பத்தினர், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை