பயங்கரவாதிகளின் தாக்குதலைப் படம் எடுத்த பத்திரிகையாளர்கள்| Dinamalar

பயங்கரவாதிகளின் தாக்குதலைப் படம் எடுத்த பத்திரிகையாளர்கள்

Added : ஏப் 01, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பயங்கரவாதிகளின் தாக்குதலைப் படம் எடுத்த பத்திரிகையாளர்கள்

12. சாட்சி தொடர்ந்தார். உடனே காவல் நிலையத்திற்கு ஓடிச்சென்று கூடுதல் போலீஸ் தேவையென்று கேட்டதாகக் கூறினார். அவர் காவல் நிலையத்தின் கதவை நெருங்கியபோது, பயங்கரவாதிகளால் சுடப்பட்டதில், அவரது வலது தோளில் குண்டு பாய்ந்து காவல் நிலைய மேசையின் மீது புல்லட் விழுந்தது. இது ஸ்டேஷன் ஆபீசரின் மேசை. அவர் பயங்கரவாதிகள் தாக்குதல் பற்றி ரயில்வே போலீஸ் ஹெல்ப் லைனுக்குத் தெரிவித்துக் கூடுதல் உதவி கேட்டார். தனது வாக்கி டாக்கி மூலம் ரயில்வே போலீஸ் கமிஷனருக்கும் செய்தி தெரிவித்தார்.
13. அவர் போலீஸ் கான்ஸ்டபிள் நாலாவாடேயுடன் மெயின்ஹாலுக்குத் திரும்பிவந்தார். கான்ஸ்பிளிடம் ஒரு டர்பைன் இருந்தது. எஸ்பிஐ-ஏடிஎம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிண்டே காயமடைந்து கிடந்தார். சுமார் 100-125 பிரயாணிகளும் மெயின் ஹாலில் காயமடைந்து கிடந்தனர்.


பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு:

14. அவர் மெயின் ஹாலுக்கு - மெயின் லைன் தடங்கள் - திரும்பியபோது, இரண்டு பயங்கரவாதிகளும் லோகல் ரயில்வே ஸ்டேஷன் மெயின் ஹாலுக்கு நகர்ந்துவிட்டனர். தன்னிடமிருந்த கார்பைன் மூலம் கான்ஸ்டபிள் நாலாவாடே பயங்கரவாதிகளை நோக்கி மூன்று ரவுண்டு சுட்டார். கான்ஸ்டபிள் நார்தேலே 8 ரவுண்டுகள் சுட்டார். கசாப் அவனது கூட்டாணி மீது குண்டுகள் படவில்லை. ஆனால் முதல் பிளாட்பாரத்தை நோக்கியே அவர்கள் (லோகல் லைன்ஸ்) தீவிரவாதிகள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அதற்குள் கூடுதல் போலீஸ் படை வந்துவிட்டது. பொதுமக்களும் உதவிக்கு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். சாட்சியும் இன்ஸ்பெக்டர் பாஸ்லே - அவரது தோள்பட்டை குண்டு காயத்துக்கான சிகிச்சைக்காக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
15. பயங்கரவாதிகள் சுட்டதில் கொல்லப்பட்டவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிண்டே மற்றும் ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த எம்.என்.சவுத்ரியும் இறந்துவிட்டனர் என்று சாட்சி பாஸ்லே மருத்துவமனையில் அறிந்துகொண்டார்.


மருத்துவமனையில் வாக்குமூலம்

: 16. மருத்துவமனையில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், சத்ரபதி சிவாஜி ஸ்டேஷன் நிகழ்ச்சிகள் பற்றி சம்பிரதாயமான முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. தனது வாக்குமூலத்தையும் அவர் அடையாளம் காட்டினார். (இஎக்ஸ்டி. 219) சம்பிரதாயத் தகவல் அறிக்கை (இஎக்ஸ்டி. 220)
17. அவர் (பாஸ்லே) மேலும் கூறுகையில், 2008 டிசம்பர் 28ல் ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் நடந்த அடையாள அணிவகுப்பில் மனுதாரரை (கசாப்) அடையாளம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
18. நீதிமன்றத்தின் ஒரு கேள்விக்குப் பதிலளித்த பாஸ்லே, தன்னிடம் 9 ரவுண்டுகள் கொண்ட 9எம்எம் பிஸ்டல் இருந்தபோதிலும் அதை உபயோகித்தால் ரயில் நிலையத்தில் இருந்த பிரயாணிகளும் கொல்லப்படலாம் அல்லது காயமடையும் அபாயம் இருந்ததால், பயங்கரவாதிகள் மீது அதை உபயோகிக்கவில்லை என்று கூறினார்.
19. விஷ்ணு தத்தாராம் ஸெண்டே (பிடபிள்யூ65) ரயில் நிலைய அறிவிப்பாளர். பொது அறிவிப்புத் திட்ட முறையில் ரயில்கள் வருகை மற்றும் செல்லும் நேரங்களை அவ்வப்போது அறிவிப்பது இவரது பணி. லோகல் லைன்கள் மெயின் ஹாலில், மையமான இடத்தில் தனது சகாக்களுடன் ஒரு தனி கேபினில் அமர்ந்து பணியாற்றுகிறார். இந்த ஹால் 1 முதல் 7ம் எண் ப்ளாட்பார்ம் வரை பரந்துள்ளது. இந்த அலுவலகத்தில் அமர்ந்தபடி, தடையில்லாது கடுமையாக, கண்ணாடி ஸ்கிரீன் மூலமாக மெயின் ஹாலில் இருந்து லோகல் லைன் பிளாட்பாரத்தில் நடந்த சோக நிகழ்ச்சிகளை அந்த 2008 நவம்பர் 26ம் தேதி முழுமையாகக் கண்டிருக்கிறார். தனது பணியில் மட்டுமல்லாது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தனது அறிவிப்பு வசதியைப் பயன்படுத்தி, ரயில்வே ஸ்டேஷன் பயங்கரவாதிகள் தாக்குதலில் உள்ளது, லோகல் லைனில் டிரெயின்களில் இருந்து இறங்கும்போது மெயின் ஹால் வழியாக வராது லோகல் லைன்ஸ் பின் வழியாகச் சென்றுவிடுமாறு தொடர்ந்து எச்சரித்துப் பல பயணிகளைச் சாவில் இருந்தும் காயமடையாதவாறும் காப்பாற்றியுள்ளார் என்று நீதிமன்றம் குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளது.


இரவு 09:55க்கு வெடிச் சத்தம்:

20. சத்ரபதி சிவாஜி ஸ்டேஷன் உள்ளமைப்பு பற்றி விஷ்ணு தத்தாரம் விரிவாகக் கூறினார். 26/11/2008 அன்று அவர் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பணியில் இருந்தார். இரவு சுமார் 9.55 மணிக்கு ஒரு பெரிய வெடிகுண்டு சத்தம் கேட்டது. அது வெடிகுண்டுதான் என்பதை உணர்ந்து தனது கேபின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். மெயின்ஹாலில் இருந்து பயணிகள் லோகல் லைனுக்கு ஓடுவதையும் பார்த்தார். பலருக்கு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. காயமடைந்துவிட்டதால் நகர முடியாமல் தவித்தவர்களுக்கு சிலர் உதவி செய்து கொண்டிருந்தனர்.
21. அவரது சாட்சியத்தில் 7வது ப்ளாட்பாரத்திலிருந்து 2 பயங்கரவாதிகள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். 4வது ப்ளாட்பார வாயிலுக்குள் அவர்களில் ஒருவன் வருவதைச் சுமார் 15, 20 அடி தூரத்திலிருந்து இவர் பார்த்திருக்கிறார். மற்றவன் அவனைத் தொடர்ந்து வந்தான். இருவரும் சுட்டுக்கொண்டே வந்தார்கள். இவர்கள் அப்போது நின்றுகொண்டிருந்த இடத்தைப் பார்த்ததும், இவர் தனது அறிவிப்பு வேலையை நிறுத்திவிட்டார். பயங்கரவாதிகளில் குள்ளமானவன் ஹாலில் உட்கார்ந்து, தனது துப்பாக்கியில் ஒரு மேகசினை நிரப்பி, தனது கைப்பையை எறிந்துவிட்டு மீண்டும் சுடத் தொடங்கினான்.


பறந்த குண்டுகள்; சிதறிய கண்ணாடி தடுப்புகள்:

22. பயங்கரவாதிகள் குண்டுகளுக்கு இரையாகாமல் தப்பிக்க, ஸெண்டே மற்றும் அவரது சக ஊழியர், கேபின் தரையில் உட்கார்ந்து கொண்டார்கள். என்றாலும் அவரது கேபினை நோக்கிக் குண்டுகள் பறந்தன. கண்ணாடி அமைப்புகள் மற்றும் ப்ளைவுட் அமைப்புகள் சிதறின. சுமார் ஒன்றரை மணி நேரம் கேபின் தரையில் உட்கார்ந்திருந்தனர். அப்போதும் அவர்களது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு டெலிபோன் மூலம் நிகழ்வுகளைத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.
23. பின்னர் இரண்டு பயங்கரவாதிகள் பற்றியும் இவர் விளக்கிக் கூறினார். மெயின் ஹாலில் உட்கார்ந்து துப்பாக்கியில் குண்டு நிரப்பியவன் குள்ள பயங்கரவாதியே என்றும் இவர் அவனை அடையாளம் காட்டினார். மெயின் ஹாலில் கைப்பையைத் தூர எறிந்தவனும் இவனேயென்றும் இவர் அடையாளம் காட்டினார். அவனது அடையாள அட்டை ஆர்டிகிள் 61 - இவரிடம் காட்டப்பட்டது. குள்ளனுடன் வந்த நெட்டை பயங்கரவாதியின் புகைப்படம் என்று இவர் அடையாளம் காட்டினார். ஒரு கறுப்பு சாக்கு மூட்டை (ஆர்டிகிள் 219)யை அவரிடம் காட்டியபோது லோகல் லயன் மெயின் ஹாலில் வீசப்பட்ட மூட்டை அதுவேயென்றும் அவர் அடையாளம் காட்டினார்.


படம் எடுத்த பத்திரிகையாளர்கள்:

24. இந்த சிஎஸ்டி சம்பவங்களைப் பற்றி விவாதிக்கும்போது வேணு 2 சாட்சியங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது. இவர்கள் சம்பவங்களைப் பார்த்தவர்கள் மட்டுமில்லை. இரண்டு கொலையாளிகளும் நடத்திய வெறியாட்டங்கள் மற்றும் பலியானவர்களையும் படமெடுத்துள்ளார்கள். கசாப் மற்றும் அபு இஸ்மாயில் (இறந்த பயங்கரவாதி 1) இருவரே கொலையாளிகள் என்று தீர்மானிக்க இவர்கள் எடுத்த படங்களே போதுமானது. இவர்கள் இருவரும் தொழில் ரீதியான புகைப்படக்காரர்கள் டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையில் பணியாற்றுவோர் தங்கள் பாதுகாப்பைப் பற்றிக் கொஞ்சமும் கவலையின்றி, பாராட்டத்தக்க தொழில் திறமையுடன் கொலையாளிகளைப் பயமில்லாமல் பின்பற்றி, அவர்களோடு ஓடிப் படமெடுத்துள்ளார்கள். அவர்களது நேரடியான சாட்சியும் படங்களும் சிஎஸ்டி ரணகளத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
25. சபாஸ்டியன் பர்னால்டி ஸெளஸா இந்தப் புகைப்பட சாட்சிகளில் ஒருவர். சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு எதிரேயுள்ள டைம்ஸ் ஆப் இண்டியா கட்டிடத்தில் நவம்பர் 26, 2008ல் 4வது தளத்தில் உள்ள அலுவலகப் பிரிவில் இருந்ததாக நீதிமன்றத்தில் இவர் சாட்சியமளித்துள்ளார். டைம்ஸ் ஆப் இண்டியா கட்டிடத்தில் பிரதான வாயில் சிஎஸ்டி ஸ்டேஷன் லோகல் லயன் முதல் பிளாட்பாரத்தை நோக்கி அமைந்துள்ளது. சிஎஸ்டியின் ஒரு வாயில் டைம்ஸ் ஆப் இண்டியா கட்டிடத்தை நோக்கி அமைந்துள்ளது. இரவு சுமார் 9.50 மணிக்கு தாஜ் ஓட்டலில் ஒருவன் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருப்பதாக இவரது சகாக்கள் மூலமாகக் கேள்விப்பட்டார். செய்தியைக் கேட்டவுடன் இருவரும் தாஜ் ஓட்டலுக்குக் கிளம்பினார்கள். டி.ஸெளஸாவும் அவரது நண்பரும் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார்கள். மெயின் வாசலில் இருந்து வெளியே வந்ததும் சிஎஸ்டியில் குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டார்கள். டிஸெளஸா சாலைப் பிரிப்புச் சுவரைத் தாண்டிக் குதித்துத் தனது நிகான் டிஜிடல் கேமராவுடன் சிஎஸ்டி லோகல் லயன் முதல் பிளாட்பாரத்தில் நுழைந்தார். ரயில் நிலையம் பயணிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. முதல் பிளாட்பாரத்தில் ஒரு டிரெயின் நின்று கொண்டிருந்தது. 2, 3 பிளாட்பாரங்களிலும் ரயில்கள் இல்லை. அங்கிருந்து மெயின் ஹாலை நோக்கி விரைந்தார். 6வது பிளாட்பாரத்தில் இருந்து வெளியே வரும் மெயின் ஹாலுக்கு வந்தார். அங்கு சீருடையில் ஒரு போலீஸ்காரரையும், சாதாரண உடையில் மற்றொருவரையும் பார்த்திருக்கிறார். மெயின் லயன், லோகல் லயன் இடையேயான வழியை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த இடத்திலிருந்துதான் சுமார் 100 அடி தூரத்தில் இரண்டு பேர் தங்கள் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இருவரும் டிக்கட் ஜன்னல் அருகே (லோகல் ரயில்வே லயன்) இருந்தனர். அந்த இடத்திலிருந்து ஒரு போலீஸ்காரர் அந்த இரண்டு பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டார்.


குண்டு பாய்ந்தது:

26. அருகில் இருந்த புத்தகக்கடை உரிமையாளர் தனது கடை ஷட்டரை இழுக்கத் தொடங்கினார். அவர் இழுத்துக் கொண்டிருக்கும்போதே அவர்மீது குண்டு பாய்ந்து விழுந்தார். டிஸெளஸா புத்தகக் கடை உரிமையாளரைப் படம் பிடித்தார்.
27. டிஸெளஸா பின்னர் இந்த இரண்டு துப்பாக்கிக்காரர்கள் தோற்றங்கள், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பற்றி வர்ணித்தார். மனுதார் (கசாப்) குட்டையானவன் என்றும் இருவரும் துப்பாக்கி ஏந்தி நின்றனர் என்றும் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
05-ஏப்-201404:18:51 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஹிந்துக்கள் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். எல்லா ஹிந்து பெரியவர்களும் இதை இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூற வேண்டும். எந்த அளவிற்கு நமது சதவிகிதம் குறைகிறதோ, அந்த அளவிற்கு நமக்கு ஆபத்து. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அந்த மதத்தினரின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் கூட இல்லை. அதனால் தான் அங்கே தீவிரவாத தாக்குதல்கள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X