சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி

Added : ஏப் 03, 2014 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து  நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி

புதுடில்லி: உ.பி.,யில் போட்டியிடும் நடிகை நக்மா, தொண்டர்களின் உடும்பு பிடியில் அடிக்கடி சிக்கித் திணறுவதால், அவருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் படி, கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகை நக்மா, 39. லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில், உ.பி., மாநிலம் மீரட் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சமீபத்தில், அவர் மீரட்டில் பிரசாரம் செய்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர், நக்மாவின்
கன்னத்தில் முத்தமிட்டு, அவருக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து, மற்றொரு நாள், மீரட் நகரம் வந்த நக்மாவை, ஏராளமான காங்கிரசார் திரண்டு நின்று வரவேற்ற போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், நக்மாவிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, அவரை கன்னத்தில் அறைந்தார்.
மேலும், "இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மீரட்டுக்கு வர மாட்டேன்' என, கோபத்தில் கூறி சென்றார். இதையடுத்து, நக்மா பிரசாரத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க, காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இதற்கு, தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பில், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "நக்மாவுக்கு, பொதுமக்களிடமிருந்து தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, அவரின் பிரசாரத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.
மொத்தம், 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் தலைமையிலான அரசு உள்ளது. மீரட் தொகுதியில், இம்மாதம் 10ல், தேர்தல் நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
04-ஏப்-201406:52:07 IST Report Abuse
K.Sugavanam ராவுலு கச்டடில எடுத்தா ஒரு பயல் திரும்பி பாக்க மாட்டான்....
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-ஏப்-201402:07:14 IST Report Abuse
Sundeli Siththar மொதல்ல, இவருக்கு முத்தம் கொடுத்த எம்.எல்.ஏவை கட்சியை விட்டு தூக்குங்க...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-ஏப்-201401:38:49 IST Report Abuse
Sundeli Siththar முத்தக் கலாசாரம், காங்கிரசில் ஒட்டுமொத்தமாக இருக்கிறது போலும்... ராகுலுக்கு முத்தம், நக்மாவிற்கு முத்தம்.. அடச்சே.. இந்த அளவிற்கா காங்கிரஸ் கேடுகெட்டு போயிருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X