CBI to charge Devyani Khobragade, her father in Adarsh scam | தேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு

Updated : ஏப் 06, 2014 | Added : ஏப் 06, 2014 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேவயானி மீது குற்றச்சாட்டு: சி.பி.ஐ., முடிவு

புதுடில்லி: மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில், அமெரிக்க மாஜி துணை தூதர், தேவயானி மீது, சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளது.




ஆதர்ஷ் ஊழல்:

மும்பை, -கொலாபா பகுதியில், ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டி, கார்கில் போர் வீரர்களுக்கும், அப்போரில் உயிரிழந்தவர்களின், மனைவிகளுக்கும் அளிக்க, மகாராஷ்டிர அரசு, 'ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டி' யை உருவாக்கியது. முதலில் ஆறு மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக, 31 மாடிகள், 103 வீடுகள் என, மாற்றப்பட்டது. இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின், 60 சதவீத வீடுகள், கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40 சதவீத வீடுகளை, பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 103 வீடுகளில், 34 பேர் மட்டும் ராணுவத்தை சேர்ந்தவர்கள். இதில், மூன்று பேர் மட்டும் கார்கில் போரில் பங்கேற்றவர்கள்.



விசா மோசடி:

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர், அசோக் சவான், தன் மாமியாருக்கும் மருமகளுக்கும், இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியது அம்பலமானதால், அவர், முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. அமெரிக்காவுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த தேவயானி, விசா மோசடி வழக்கில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு, அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளதால் தற்போது, டில்லியில் தங்கியுள்ளார். தேவயானியின் தந்தை, உத்தம் கோபார்கடே. இவர், மகாராஷ்டிர வீட்டு வசதித்துறை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது, ஆதர்ஷ் குடியிருப்பில், தேவயானிக்கும் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார். வெளியுறவு அதிகாரியாக இருந்த தேவயானி, ராணுவத்திற்கான குடியிருப்பை பெற, போலியான தகவல்கள் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேவயானி மீது, விரைவில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
06-ஏப்-201406:40:29 IST Report Abuse
sulochana kannan அப்பனுக்கும் மகளுக்கும் என்ன பேராசை...விளங்குவாங்க்களா...எல்லையில் உசுரை குடுத்து, குளிரிலும் மழையிலும் ராணுவ வீரர்கள் செத்து செத்து பிழைத்து நாட்டை காப்பத்துனா, அவங்க விடுற பெருமூச்சின் அனலிலே இவங்க குளிர் காயராங்க... ஏன் இந்த வீடுய்கள் கட்டுற விஷயமே ராணுவ வீரகளுக்கு தெரியக்கூட தெரியாமெ இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
06-ஏப்-201406:01:11 IST Report Abuse
rajan அமெரிக்க விசா பிராடுல அவுக இந்த அம்மாவ கைது செய்ததும் நம்ம உள்ளூர் அரசியல் தாதாக்கள் இந்த தேவயானிக்கு பதவி உயர்வு கொடுத்து சாமரம் வீசுனக. இபோ போலி ஆவணம் கொடுத்து வீடு வாங்கியதில் இந்த அம்மாவை காங்கரஸ் அரசு சிபிஐ டைரக்டர் ஆக்கி அழகு பார்துடுவான்களோ.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஏப்-201404:59:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி தேவயானி மேல் வழக்குக்கு மேலே வழக்கா வருது.. பிரதமர் ஆகும் தகுதியும், கிரகமும் வந்து விட்டது என்று நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு இன்னொரு அம்மாவும் இப்படி தான் நினைத்துக் கொண்டு பறக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X