Sri lanka refuse to cooperate with UN | ஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு| Dinamalar

ஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு

Updated : ஏப் 09, 2014 | Added : ஏப் 08, 2014 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு

நியூயார்க்: 'இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடந்த, போர் குற்றம் குறித்து, ஐ.நா.வின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது' என, இலங்கை மறுத்துள்ளது.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே, 2009ல் நடந்த, இறுதிக்கட்ட சண்டையின் போது, தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன. 'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவர், நவநீதம் பிள்ளை, வலியுறுத்தி இருந்தார். கடந்த மாதம், சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா நகரில், சர்வதேச மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, தீர்மானம் நிறைவேற்றியது. அதில், 'இலங்கை போரின் போது நடந்த, மனித உரிமை மீறல் குறித்த விரிவான, அதே சமயம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்த போதிலும், தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 'இத்தீர்மானத்தை ஏற்க முடியாது' என, இலங்கை அதிபர், ராஜபக்சே தெரிவித்திருந்தார். இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், பான் கி மூன், ''சர்வதேச மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை, இலங்கை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். மனித உரிமை கவுன்சிலுடன் அனுசரித்து போக வேண்டும்' என, அறிவுறுத்தியிருந்தார்.


இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு நிருபர்களிடம் குறிப்பிடுகையில், ''ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவருக்கு, இலங்கை அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை. எனவே, மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை செயல்படுத்தமுடியாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthi - Dubai  ( Posted via: Dinamalar Android App )
10-ஏப்-201400:22:14 IST Report Abuse
Parthi சிங்களன் தி்ருந்த மாட்டான். தமிழ்நாட்டில் இறுந்து எச்சில் துப்புனா இலங்கையே மூல்கிடும் அது தெரியாம சிங்களன் அதி்கமா பேசுராங்கே...
Rate this:
Share this comment
Cancel
அப்பு - மதுரை ,இந்தியா
09-ஏப்-201413:13:51 IST Report Abuse
அப்பு தவறு செய்யாவிட்டால் பின்னர் ஏன் மறுக்கப்படவேண்டும்? உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்.....ஐ நா இலங்கை மேல் பொருளாதார தடை போட வேண்டும்.....மேலும் மனிதர்களை கொள்ளும் கொலைபாதகர்கள் பலர் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.....ரசாயன ஆயுதமே இல்லாத ஈராக்கின் மேல் படை எடுத்து நாசம் செய்த அமேரிக்கா ஐநா துணையுடன் ரசாயன ஆயுதங்கள் வீசி அப்பாவி பொதுமக்களை கொன்ற இலங்கை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லாவிட்டால் ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் என்ற கதையாகிவிடும்.....
Rate this:
Share this comment
Cancel
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
09-ஏப்-201411:16:09 IST Report Abuse
Aravindh Raman இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா நாடுகளின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற மமதை இந்த கொலை கார பசங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X