கேமராவுடன் ஓடிய பத்திரிகையாளர்| Dinamalar

கேமராவுடன் ஓடிய பத்திரிகையாளர்

Added : ஏப் 12, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
கேமராவுடன் ஓடிய பத்திரிகையாளர்

ரயில் பெட்டிக்குள் மறைந்து நின்று: 28. டிஸெளஸா மேலும் கூறியதாவது: இந்தப் பயங்கரவாதிகளைப் படமெடுக்க இவர் விரும்பினார். அதற்காக 6வது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் ஒரு பெட்டிக்குள் ஏறிக்கொண்டார். சீருடையிலும் சாதாரண உடையிலும் இருந்த போலீசார் இன்னும் அங்கேயே இருந்தனர். சாதாரண உடையிலிருந்தவரும் ஒரு போலீஸ்காரரே என்று இவர் எண்ணினார். சாதாரண உடையிலிருந்த போலீஸ்காரர் சீருடைப் போலீஸ்காரரிடமிருந்த துப்பாக்கியை எடுத்து மனுதாரரையும் (கசாப்) அவனது கூட்டாளியையும் சுடுவதற்கு நின்றார். இந்த இரண்டு போலீஸ்காரர்களையும் டிஸெளஸா படமெடுத்தார். அவர்கள் பயங்கரவாதிகளைச் சுட நின்ற அபாயமானதாக இருந்ததால் ரயில் பெட்டிக்குள் வரமாறு டிஸெளஸா அழைத்தார்.29. இந்த பயங்கரவாதிகள் லோகல் லயன் பிரிவை நோக்கி வந்து கொண்டிருந்ததால், 4வது பிளாட்பாரத்துக்குச் சென்றதாக டிஸெளஸா தனது சாட்சியத்தில் மேலும் கூறினார். மேலும் 100 படங்களுக்கு மேல் தான் எடுத்ததாகவும், ஆனால் அவற்றில் பல சரியாக விழவில்லையென்றும் அவர் கூறினார். கேமராவில் உள்ள விளக்கை தான் பயன்படுத்தவில்லையென்றும், ரயில்நிலையத்தில் இருந்த வெளிச்சம் படங்கள் எடுக்க போதுமானதாக இல்லையென்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார். தான் எடுத்த படங்களை அவர் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.


மெமரி கார்டில் பதிவு:

30. புத்தகக் கடைக்காரர் குண்டு பாய்ந்து விழுந்த படம் இஎக்ஸ்டி.238 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. சீருடை மற்றும் சாதாரண உடை போலீஸ்காரர்களைக் காட்டும் 3 படங்கள் மொத்தமாக இஎக்ஸ்டி.239 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணுக்குப் பின்னால் நின்றுகொண்டு கசாபை டிஸெளஸா எடுத்த 3 படங்கள் மொத்தமாக இஎக்ஸ்டி 240ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. கசாப் மற்றும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் (இறந்த துப்பாக்கிக்காரன் 1) இருவரையும் சேர்த்து டிஸெளஸா எடுத்த 4 படங்கள் மொத்தமாக இஎக்ஸ்டி 241 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. இறந்தோ அல்லது காயமடைந்தோ கிடந்த இருவரைக் காட்டும்" படம் இஎக்ஸ்டி 242(11) ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் லோகல் லயன் பிளாட்பாரம் நிர்.1க்குச் சென்ற பின்னர், மெயின் லைன் மெயின் ஹாலில் இறந்தோ, காயமடைந்த நிலையில் விழுந்து கிடக்கும் 10 படங்கள் மொத்தமாக இஎக்ஸ்டி 243 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது.
31. தான் எடுத்த படங்களைக் கேமராவின் மெமரி கார்டில் பத்திரப்படுத்தியுள்ளதாக டிஸெளஸா நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் இந்தப் படங்களைத் தருவதற்கு இவர் ஒரு குறுந்தகடும் - சிடி-யை மெமரி கார்டில் தயாரித்துள்ளார். சிடி-யில் இருந்து பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். (இவற்றை ஆர்டிகிள் 216 என்று மார்க் செய்த பின்னர் சாட்சியிடமே இதைத் திருப்பிக் கொடுத்து, அடுத்த உத்தரவு வரை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உத்தரவிடப்பட்டது).
32. இந்த சிடி போலீஸ் முன்னிலையில் 2009 ஜனவரி 7ம் தேதி காட்டப்பட்டது. சாட்சிகள் முன்னிலையில் காட்டப்பட்டுப் பின்னர் சீல் வைக்கப்பட்டது. பின்னர் இந்த சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டு (எண்.204) நீதிமன்றத்தில் ஆர்டிகிள் 217 எண்ணாகக் குறிக்கப்பட்டது.


ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை:

33. அவர் - டிஸெளஸா கூறிய ஒரு செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இருந்த பொது அறிவிப்பு வசதி மூலமாக, ரயில் நிலையத்துக்குள் வரும் லோகல் டிரெயின்களில் இறங்கும் பயணிகள், வண்டியிலிருந்து இறங்க வேண்டாம். இறங்க வேண்டிய அவசியம் இருந்தால், மெயின் ஹாலுக்கு வரவேண்டாம், பின்வாசல் வழியாக வெளியே செல்லவும் என்று பயணிகள் எச்சரிக்கப்பட்டதைக் கேட்டதாகவும் டிஸெளஸா தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
34. ஸ்ரீராம் ரமாகாந்த் வெர்னேகர் (பிடபிள்யூ 102) இன்னொரு போட்டோகிராபர் சாட்சி. இவரும் டைம்ஸ் ஆப் இண்டியாவில் பிரெஸ் போட்டோகிராபராகப் பணியாற்றுபவர். சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு எதிரேயுள்ள டைம்ஸ் ஆப் இண்டியா அலுவலகத்தில் 2008 நவம்பர் 6ம் தேதி இருந்ததாக இவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் தனது கேமராவை எடுத்துக்கொண்டு இவர் சிஎஸ்டி நோக்கி ஓடினார். அங்கிருந்த சுரங்க நடைபாதை - சப்வே - வழியாகச் சென்றார். இரண்டுபேர் ரயில்வே அலுவலகம், புக்கிங் அலுவலகம் நோக்கிச் சுட்டுக் கொண்டிருப்பதை இவர் பார்த்திருக்கிறார். மெயின் ஹால் வாயிலில் இருந்தும், சுரங்கப்பாதைப்பகுதியில் இருந்தும் இவர் இந்தப் பயங்கரவாதிகளைப் படமெடுத்துள்ளார். அவர்கள் இவர் இருந்த திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்ததால், இவர் ஸ்டேஷனில் இருந்து வெளியேறி, சாலைப்பிரிவுச் சுவரைத் தாண்டி டைம்ஸ் ஆப் இண்டியா கட்டிடப் பகுதிக்கு வந்துவிட்டார்.
35. முதல் போட்டோவை எடுக்கும்போது இரண்டு பயங்கரவாதிகளும் 6வது பிளாட்பாரத்தில் இருந்ததாக இவர் கூறினார். இவர் தனது 4 போட்டோக்களை நன்கு பெரிதாக்கிக் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். இவை மொத்தமாக இஎக்ஸ்டி. எண்.410ஆக, அடையாளம் காட்டுவதற்காகப் பதிவு செய்யப்பட்டது.


கையெறி குண்டு வீச்சு:

36. மேலும் தனது டீ200 நிகான் கேமராவில் எடுத்த 10 படங்களை மெமரி கார்டில் பத்திரப் படுத்தியதையும் கோர்ட்டில் காட்டினார். பின்னர் அடையாளம் காட்ட தேவைப்படுமென்பதால் இந்த மெமரி கார்டு இஎக்ஸ்டி.411ஆகப் பதிவு செய்யப்பட்டது. இவரது 410ஏ, 410பி மற்றும் 410சி(12) 3 போட்டோக்களும் பயங்கரவாதிகளை தான் எடுத்த முதல் படங்கள் என்றும் தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் பயங்கரவாதிகளில் ஒருவன் கைக்குண்டு ஒன்றை மெயின் ஹாலில் இருந்து வரும்போது முதல் பிளாட்பாரத்தில் எறிந்தான். அதை எம்சிஜிஎம் கட்டிடம் முன்புள்ள டீஎன் ரோடு மீது எறிந்தான் என்றும் கூறினார்.
இவர்கள் கால்நடைப் பாலம் வழியாக முதல் பிளாட்பாரத்திற்குப் போனதாகவும், தோளில் கைப்பை தொங்கவிட்டுக் கொண்டிருந்ததாகவும், இவர் அப்போது டைம்ஸ் ஆப் இண்டியா அருகில் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போதும் கைக்குண்டுகளை எறிந்துகொண்டே வந்ததாகவும், அப்போதும் அவர்களைப் படம் எடுக்க டைம்ஸ் பத்திரிகையின் இரண்டாவது தளத்துக்கு விரைந்ததாக மேலும் தெரிவித்தார். அங்கிருந்த இந்த கால்நடைப் பாலம் தெளிவாகத் தெரியும். அங்கிருந்து 3-4 படங்கள் எடுத்துள்ளார். அவை திருப்தியாக இல்லாததால் பிளாஷ் உபயோகித்து இன்னொரு படமும் எடுத்தார். இதைப்பார்த்து எச்சரிக்கை அடைந்த குள்ளன் (கசாப்) டைம்ஸ் கட்டடத்தை நோக்கி 3-4 ரவுண்டு சுட்டான். பிளாஷ் பயன்படுத்தி எடுத்த 4வது படத்தையும் (இஎக்ஸ்டி 410டி) அடையாளம் காட்டினார். இந்தக்குள்ளன் ஓவர் பிரிட்ஜில் இருந்து இறங்கி பத்ருதீன் டாயாப்ஜி சாலைக்குள் செல்லும்போது எடுத்த படம் இதுவே என்று இவர் மேலும் தெரிவித்தார்.
37. நீதிமன்றத்தில் குள்ள பயங்கரவாதியை வெர்னேகர் அடையாளம் காட்டினார். மேலும் அடையாள அட்டையில் இருந்த மனுதாரரின் (கசாப்) கூட்டாளியையும் இவர் அந்த அட்டையிலிருந்து (ஆர்டிகிள் 61) அடையாளம் காட்டினார்.


போலீசார், பொதுமக்கள் சாட்சியம்:

38. சிஎஸ்டி ரயில் நிலையத்தில் இருந்த பிற சாட்சிகளில் முதலில் அங்கிருந்த போலீசார், பின்னர் சில பயணிகள் சாட்சியங்களையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
39. ஜிலு பத்து யாதவ் (பிடபிள்யூ54), மமத் மோதிரால் நர்தேலே (பிடபிள்யூ58), ஹர்ஷத் ஹஞ்சு பாடீல் (பிடபிள்யூ59), கீதாஞ்சலி கிருஷ்ணாராவ் குராவ் (பிடபிள்யூ60), சுதாமா அபா பண்டார்கர் (பிடபிள்யூ62), பாண்டுரங் சுப்ராவ் பாடீல் (பிடபிள்யூ63) மற்றும் சந்தீப் தாணாஜி கிராத்கார் (பிடபிள்யூ63) ஆகியோர் போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். விசாலமான சிஎஸ்டி ஸ்டேஷனில் இவர்கள் பல்வேறு இடங்களில் சம்பவம் நடந்த சமயத்தில் டியூட்டியில் இருந்தார்கள். குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டும் பயணிகள் உயிருக்குப் பயந்து பீதியில் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்தும், ரயில் நிலையத்துக்குள் பயங்கரவாதத் தாக்குதல் விபரீதம் நடக்கிறது என்பதை இவர்கள் புரிந்துகொண்டார்கள். உடனே தங்களது இடங்களிலிருந்து, தாக்குதல் நடக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்கள். அப்படி அவர்கள் தங்கள் இடங்களை விட்டு வரும்போது, அவர்களில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களில் சிலர் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இன்றித் தப்பித்தனர். சிலர் கடுமையான காயங்களில் இருந்து தப்பி, நிகழ்ச்சிகளைக் கூற நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மற்றும் சிலர் தங்களிடம் தக்க ஆயுதபலம் இல்லாமையாலும், தங்களிடமிருந்து பழமையான ஆயுதங்கள் பயன்படாமையாலும் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது இறந்துபட்டனர்.


பயங்கர வாதிகளைப் பார்த்த போலீஸ்காரர்:

40. ஹர்ஷத் பஞ்சு (பிடபிள்யூ59) ஒரு போலீஸ்காரர். சம்பவ தினத்தில் லோகல் டிரெயின்களில், பெண்கள் பெட்டியில் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அவரிடம் 10 ரவுண்டுகள் கொண்ட 303 ரைபிள் இருந்தது. பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த சமயம், 3வது லோகல் பிளாட்பாரத்திற்கு வரும் ரயிலில் தனது டியூட்டிக்காக இவர் மெயின்ஹால் போலீஸ் உதவி மையம் அருகே காத்துக் கொண்டிருந்தார். போலீஸ் கான்ஸ்டபிள்கள் நர்தேலே மற்றும் காவித் இருவரும் அங்கே இருந்தனர். இருவரிடமும் கார்பைன்கள் இருந்தன. இவர்கள் இருவருடனும் ஷஷன்க் ஷிண்டே மெயின் லயன் ஸ்டேஷனை நோக்கிச் சென்றார். பாட்டீல் தனது ரைபிளில் 10 ரவுண்டுகளை நிரப்பத் தொடங்கினார். மெயின் லயனிலிருந்து லோகல் லயனை நோக்கி இரண்டு பயங்கரவாதிகளும் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்தார். போலீஸ் உதவி மையத்தில் ஜாக்கிரதையாக நின்று பயங்கரவாதிகளை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். ஆனால் குண்டு சரியில்லாததாலும், அவரது துப்பாக்கி போல்ட் ஜாம் ஆகிவிட்டதாலும் குறி தவறிவிட்டது. அதனால் அதைத் திறக்கமுடியவில்லை. அதற்குள் பயங்கரவாதிகள் லோகல் லயன்ஸ் 3வது பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டனர். அதே சமயத்தில் தலைமை கான்ஸ்டபிள் ஜில்லு பத்து யாதவ் (பிடபிள்யூ54) - ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் - அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் எந்தவித ஆயுதமும் இல்லை. பாட்டீலிடம் ரைபிள் இருந்ததை இவர் பார்த்தார். பயங்கரவாதிகளில் ஒருவன் மெயின் ஹாலில் தரையில் உட்கார்ந்துகொண்டு அவனது ரைபிளில் மாகசின்களை நிரப்புவதை யாதவ் பார்த்தார். அந்த பயங்கரவாதியைச் சுடுமாறு பாட்டீல் யாதவ் இடம் கூறினார். அவரது துப்பாக்கி போல்ட் ஜாம் ஆகி அது திறக்க முடியாதென்ற விஷயம் பாட்டீலுக்குத் தெரியாது. பயங்கரவாதிகளைச் சுடுவதற்கு யாதவ் தவிர்ப்பதாகப் பாட்டீல் நினைத்தார். எனவே தனது துப்பாக்கியில் குண்டு நிரப்பிக் கொண்டிருந்த பயங்கரவாதியைச் சுடுவதற்குப் பாட்டீல் யாதவ் இடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கித் தானே அவனை நோக்கிச் சுட்டார். ஆனால் பழுதடைந்திருந்த அந்தத் துப்பாக்கி வேலை செய்யவில்லை. அதே சமயம் மற்றொரு பயங்கரவாதியும் அங்கு வந்து சேர்ந்துவிட்டான். யாதவ், பாட்டீல் இருந்த திசை நோக்கிச் சுட்டான். அங்கிருந்த ஒரு தூணுக்குப் பின்னால் இருவரும் மறைந்துகொண்டு, அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைப் பயங்கரவாதிகள் மீது வீசினார்கள். அதற்குப் பதிலடியாகப் பயங்கரவாதிகள் முதல் பிளாட்பாரத்தை நோக்கிச் சென்றுகொண்டே இவர்கள் மீது சுட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
13-ஏப்-201419:49:11 IST Report Abuse
Rajkumar // பழுதடைந்திருந்த அந்தத் துப்பாக்கி வேலை செய்யவில்லை.// போலீஸ் காரர்கள் துப்பாக்கி மட்டும் தான் வேலை செய்யலையா ? அதே சமயத்தில் இந்தியன் ஆர்மி வைத்திருக்கும் அனைத்து தளவாடங்களும் தரமானவையா ? ஒரு அவசர காலத்துக்கு தாக்கு பிடிக்குமா.. அல்லது அரசாங்கம் ஒரு ஜம்பத்துக்கு வச்சுகோங்கன்னு கொடுத்தச்சா.. ? முப்பது நாப்பது வருஷமா இன்னமும் சில ஏரியா போலீசு மற்றும் வனத்துறை பழைய காலத்து ஜீப்பை ஒட்டிகொண்டிருக்கின்றன.. அதுபோல வேலை செய்யுமா செய்யாதான்னு தெரியாமலேயே பல போலீசுகள் மற்றும் ராணுவம் ஆயுதங்களை வைத்துள்ளனர். கொடுமை... நம்மை எதிர்த்து (சீன சப்போர்டில்) பூடான் வந்தால் கூட பதில் தாக்குதலுக்கு நம் தளவாடங்கள் தரமானவையா என்பது சந்தேகமே... அப்பப்போ விமானம் / கப்பல்கள் வாங்குவதாக தகவல்தான் வருகிறது.. தரம் எப்படி என்பது தெரிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X