போரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க இலங்கை அரசு திட்டம்| Dinamalar

போரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க இலங்கை அரசு திட்டம்

Added : ஏப் 16, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு: இலங்கையில், நடந்த சண்டையின் போது காணாமல் போனவர்களின், உறவினர்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே, 25 ஆண்டுகளாக மோதல் நீடித்தது. 2009ல், இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இச் சண்டையின் போது, ஏராளமானவர்களை காணவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த, ஐ.நா., கோரிய போது, அதை இலங்கை அரசு மறுத்து விட்டது. இலங்கையில், மனித உரிமை மீறல் நடப்பதாக, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் மூன்று முறை, அந்நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சர்வதேச நாடுகளின், கெடுபிடி காரணமாக, இலங்கை அரசு, சண்டையின் போது, இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பை, கடந்த ஆண்டு இறுதியில் துவக்கியது.

இது குறித்து இலங்கை அதிபர் மாளிகை செயலக அதிகாரி, குணதாசா கூறியதாவது: இலங்கையில் சண்டை நடந்த காலங்களில், 18 ஆயிரம் பேர் காணாமல் போனதாக, புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் ராணுவ வீரர்களின் உறவினர்கள் தரப்பில், 5,000 புகார் பதிவாகி உள்ளன. காணாமல் போனவர்கள் திரும்பி வருவார்கள், என்ற நம்பிக்கையில், அவர்களது உறவினர்கள் உள்ளனர். காணாதவர்களுக்காக, இறப்பு சான்றிதழ் கொடுப்பதையோ, இழப்பீடு அளிப்பதையோ, பல உறவினர்கள் விரும்பவில்லை. மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த உறவினர்களுக்கு, உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு குணதாசா கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X