வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு; பதவியில் இல்லாத போதும் மக்களுக்காகவே உழைப்பு| Dinamalar

வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு; பதவியில் இல்லாத போதும் மக்களுக்காகவே உழைப்பு

Added : ஏப் 21, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

""எம்.பி.,யாக இருந்த போதும், பதவியில் இல்லாத போதும், மக்கள் பிரச்னைகளை பேசி வருபவர் வைகோ,''என, அவரது மகன் துரை வையாபுரி பேசினார்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம், சிவகாசி பகுதியில் நேற்று நடந்தது. இதை, சிவகாசி மணிநகரில் துவக்கி வைத்த அவர் பேசியதாவது: வைகோவிற்கு, சாதி, மதங்களை தாண்டி, மக்கள் ஆதரவு தருகின்றனர். அவர், எம்.பி.,யாக இருந்த போதும், பதவியில் இல்லாத போதும், மக்கள் பிரச்னைகளை பேசி வருகிறார். பட்டாசு, தீப்பெட்டி அச்சு தொழிலுக்கு, எப்போதும் பாதுகாவலராக இருந்து வருகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், வைகோ வெற்றி பெற்று, அமைச்சர் ஆவார் என, குறிப்பிட்டார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்து, தேர்தலில் நிற்க வில்லை. எப்படி இருந்தாலும், மக்கள் பணிகளை செய்வார். இத் தொகுதியில் அவருக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு, வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி கட்சிகளும் நன்கு ஒத்துழைக்கின்றனர். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர், என்றார்.300க்கு மேற்பட்ட இளைஞர்கள், பைக்கில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைக்கும் போது, துரை வையாபுரி தே.மு.தி.க., கொடியையும், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வைரமுனி ம.தி.மு.க., கொடியையும் பிடித்து துவக்கினர். இதை தொடர்ந்து, துரை வையாபுரி நிருபர்களிடம் கூறுகையில்,""மத்திய அரசின் புதிய உத்தரவால், 10 நாட்களாக பட்டாசு ஆலை இயக்க வில்லை. மத்திய அரசு விதித்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், பட்டாசு தொழில் பாதிக்கும். சீன பட்டாசு இறக்குமதியாகி இங்கே வந்தால், பல பட்டாசு யூனிட்கள் மூடப்பட்டு விடும். எப்படியும் அந்த உத்தரவு நடைமுறைக்கு வராது. வைகோ எம்.பி., ஆகி, அவர் கூறியது போல், சிவகாசி தீப்பெட்டியால், பட்டாசுக்கான புதிய உத்தரவு தீ வைத்து கொளுத்தப்படும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, 67 கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்கிறோம்,"" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X