மும்பை ரயில் நிலைய கோரம்; பயணிகள் திகைப்பு| Dinamalar

மும்பை ரயில் நிலைய கோரம்; பயணிகள் திகைப்பு

Added : ஏப் 22, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
மும்பை ரயில் நிலைய கோரம்; பயணிகள் திகைப்பு

மும்பை ரயில் நிலையத்தில் நடந்த கோர சம்பவங்களை போலீசாரும் திகைத்துப்போன பயணிகளும் தொடர்ந்து விவரிக்கின்றனர்.
51. கீதாஞ்சலி கிருஷ்ணாராவ் குரே (பி.டபிள்யூ 60) ரயில்வே ஸ்டேஷனில் மெயின் கேட் 3 அருகே ட்யூடியில் இருந்தார். வெடிச் சத்தங்களையும், துப்பாக்கி வெடிப்பைக் கேட்டதும், ஷிண்டே (கொல்லப்பட்டவர்), துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்லே (பி.டபிள்யூ49), துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டலே மற்றும் பிற போலீசாருடன் மெயின் லயன் மெயின் ஹாலை நோக்கிச் சென்றார். மெயின் ஹாலில், இரண்டு பயங்கரவாதிகளையும், அவர்களில் நெட்டையானவன் பிரயாணிகளை நோக்கிக் கைக்குண்டுகளை எறிவதையும் இந்தப் பெண் போலீஸ்காரர் பார்த்தார். இரண்டு பயங்கரவாதிகளும் தொடர்ந்து தங்களது ஏகே 47 மூலம் சுட்டுக் கொண்டிருந்தனர். வெடித்த கைக்குண்டுகள் பல பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்தியது. அவரும், பாஸ்லேயும் ரயில்வே காவல் நிலையத்துக்குக் கூடுதல் போலீஸ் உதவி கேட்கச் சென்றனர்.


தோளில் குண்டு பாய்ந்தது:

காவல் நிலையம் செல்லும் வழியில், பாஸ்லேயின் இடது தோளில் குண்டு பாய்ந்து அவர் விழுந்துவிட்டார். உடனே தன்னிடமிருந்த கைக்குட்டையால் அவரது காயத்தைக் கட்டி அவர் மீண்டும் எழுந்து நிற்க உதவினார். அதே சமயம் இரண்டு பயங்கரவாதிகளும் லோகல் ரயில்வே ஸ்டேஷன் நோக்கிப் போவதையும் இவர் பார்த்தார். மெயில் லயன் மெயில் ஹாலில் 100க்கும் மேலான பயணிகள் மிகவும் கடுமையான காயங்களுடன் விழுந்து கிடந்தனர்.
52. மனுதாரர் (கஸாப்) இருவரில் குள்ளமானவன் என்று கீதாஞ்சலி குராவ் அடையாளம் காட்டினார். புகைப்படத்தில் இருந்த (ஆர்டிகிள் 61) அபு இஸ்மாயிலையும் இவர் அடையாளம் காட்டிானர்.
53. இப்போது சில பயணிகள் சாட்சியங்களைப் பார்க்கலாம்:
நட்வர்லால் கிகாஜி ரோதாøவான் (பி.டபிள்யூ50) மற்றும் அவரது சுமார் 10 வயது பெண் தேவிகா நட்வர்லால் ரோதாவான் (பி.டபிள்யூ 51), பரூகி நசிருதீன் கலிலுதின் (பி.டபிள்யூ 52) நபீஸா ஷதாப் குரேஷி (பி.டபிள்யூ 53), சங்கீதா நிரஞ்சன் சர்தார் (பி.டபிள்யூ 86), அவரது கணவர் நிரஞ்சன் சதாசிங் சர்தார் (பி.டபிள்யூ 87), அன்சார் அபைக்ஷா முகமது ஹனீப் சவுதாகர் (பி.டபிள்யூ 88) ஆகியோர் சில பயணிகள் சாட்சிகள். தங்களுக்குரிய ரயில்களுக்காக இவர்கள் மெயின் லயன் மெயில் ஹாலில் காத்துக் கொண்டிருந்தார்கள். பிரயாணச் சிந்தனை, பேச்சுக்களில் இருந்த அவர்களை அபு இஸ்மாயில் (இறந்துவிட்ட குற்றவாளி1) எறிந்த முதல் கைக்குண்டு தூக்கி வாரிப் போட்டது. அந்த நிமிஷம் முதல், மனுதாரரும் (கஸாப்) அவனது கூட்டாளியும் கண்மூடித்தனமாக மெயின் ஹாலில் இருந்த பயணிகளைச் சுடுவதை நடுக்கத்துடன் பார்த்தனர். தங்கள் மீது புல்லட்கள் மற்றும் கைக்குண்டில் இருந்த துணுக்குகள் பாய்ந்து காயப்படுத்தும் வரை செய்வதறியாது அவர்கள் நிலைகுத்தி நின்றனர். இரண்டு பயங்கரவாதிகளும் வெவ்வேறு திசைகளில் ப்ளாட்பாரங்களில் திரிவதையும் இவர்கள் பார்த்தனர்.


6 மாதம் படுத்த படுக்கையாக:

54. பி.டபிள்யூ50 நட்வார்லால் ரோதாவான் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றித் தப்பினார். ஆனால் அவரது பெண் தேவிகா ரோதாவான் வலது காலில் குண்டு பாய்ந்து விட்டது. சுமார் ஒரு மாத காலம் இந்தப் பெண் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்றார். பின்னரும் 4-6 மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். இந்த நிகழ்ச்சி முடிந்து 6 மாதங்களுக்குப்பின் நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வரும்போது அவளால் சரியாக நடக்க முடியவில்லை.
55. நீதிமன்றத்தில் மனுதாரரை (கஸாப்) குட்டையானவன் என்று அடையாளம் காட்டிய நட்வார்லால், உயரமான மற்றொருவன் அங்கில்லையென்றும் கூறினார். ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கியால் சுட்டவன் கஸாப் என்று குழந்தை தேவிகா அடையாளம் காட்டினாள். பரூக் நசிருதீன் கலாலுதீன் (பி.டபிள்யூ52) அவரது மகனுடன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தார். இரண்டாவது குற்றவாளி அபு இஸ்மாயில் (இறந்து விட்டவன்) எறிந்த கைக்குண்டினால் இருவருமே காயமடைந்தனர். மகன் படுகாயமடைந்தான். இந்தப் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு சுமார் 15 -20 நிமிடங்கள் தொடர்ந்தன வென்று கலாலுதீன் கோர்டில் கூறினார். இவர்களில் உயரமானவன் தனது பையில் இருந்து ஒரு வெடிகுண்டை எடுக்கச் சற்று சுடுவதை நிறுத்தினான். இவர்களை நோக்கி அந்தக் குண்டை வீசினான். அதே சமயம் மற்றவன் (கஸாப்) தொடர்ந்து சட்டுக் கொண்டேயிருந்தான். அப்போது அவன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அவனை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டும் போதும் அவர் கண்ட மகிழ்ச்சியான பயங்கரவாதி அவனேயென்று மீண்டும் கூறினார்.


6 வயது சிறுமி பலியான பரிதாபம்:

56. நபீஸா குரேஷி வீட்டு வேலை செய்யும் பணிப்பெண். தனது ஆறு வயதுப் பெண் அஃபிரின்-ஐப் பயங்கரவாதிகள் குண்டுக்குப் பலி கொடுத்து விட்டார். அந்தக் குழந்தையின் முதுகில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் இறந்து விட்டது. நபீஸாவின் இடது காலிலும் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
57. சி.எஸ்.டி. ஸ்டேஷனில் எல்லா திசைகளிலும் துப்பாக்கியால் சுட்டவன் முனுதாரனே (கஸாப்) என்று இவர் அடையாளம் காட்டியதோடு, இருவரில் இவன் குள்ளமானவன் என்றும் கூறினார்.
58. கைக்குண்டுத் துணுக்குகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் சங்கீதா சர்தார் (பி.டபிள்யூ 86) மற்றும் அவரது கணவர் நிரஞ்சன் சதாசிவ் சர்தாரர் (பி.டபிள்யூ 87) இருவரும் காயமடைந்தனர். கைக்குண்டுகளின் இரும்பு உருண்டைகள் சங்கீதாவைத் துளைத்துள்ளன. அவர் கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்தபோது அவற்றில் சில அவரது உடலில் இன்றும் தங்கியிருந்தது. அவரது கணவர் நிரஞ்சன் மீது இரண்டு புல்லட்டுகள், தலையின் வலது பக்கமும், வலது காதின் கீழும் பாய்ந்து குண்டுக் காயங்களை ஏற்படுத்தின. இருவரும் மருத்துவமனையில் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.


போட்டோ மூலம் அடையாளம்:

59. சி.எஸ்.டி. ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் குள்ளன் என்று சங்கீதா அடையாளம் காட்டினார். நெட்டையனை அவனது புகைப்படத்திலிருந்து அடையாளம் காட்டினார்.
60. அன்சார் அலபக்ஷா முகமது அனீப் சவுதாகார் (பி.டபிள்யூ 88) வலது காலில் முழங்கால் மூட்டுக்குக் கீழ் குண்டடி பட்டுக் காயமடைந்தார். மூன்று குற்றவாளிக்கு நடுவில் முனுதாரரை (கஸாப்) அடையாளம் காட்டுமாறு நீதிமன்றம் கேட்டதற்கு சரியாக அடையாளம் காட்டி, இருவரில் அவனே குள்ளமானவன் என்றும் தெரிவித்தார். இவனே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் பயணிகளைச் சுட்டவன் என்று அடையாளம் காட்டினார். இறந்து விட்ட 7 பேர், காயமடைந்த 10 பேர் கொண்ட புகைப்படத்திலிருந்து, குள்ளனோடு இருந்த அவனது கூட்டாளியையும் அடையாளம் காட்டினார்.
61. வெர்னேகர் (பி.டபிள்யூ 102) எடுத்த புகைப்படம், கஸாப் மற்றும் அபு இஸ்மாயில் இருவரும் நடைபாதைப் பாலத்தின் வழியாக வெளியேறுவதைக் காட்டுகிறது. நடைபாதைப் பாலம் வழியாக இறங்கி, இருவரும் பத்ருதீன் தாயாப்ஜி சாலைக்கு வந்தனர். இது நீண்ட சாலை, அதன் ஒரு பகுதி காமா மருத்துவமனை வழியாகவும் செல்லுகிறது. இங்கு பல கட்டிடங்கள் உள்ளன. அதில் ஆறு அடுக்கு கொண்ட புது மருத்துவமனைக் கட்டிடமும் உள்ளது. காமா மருத்துவமனையின் வாயில் மகாபாலிகா சாலை மேற்புறத்தில் உள்ளது. இதன் பின்புறத்தில் பத்ருதீன் தாயாப்ஜி சாலை உள்ளது. சிஎஸ்டி ஸ்டேஷனில் இருந்து கஸாப், அபு இஸ்மாயில் இருவரும் வெளியேறிய நிமிஷத்திலிருந்து, காமா மருத்துவமனைக்கு வந்து, அங்கிருந்து அவர்கள் நடந்து ஒவ்வொரு அடி தூரத்தையும் கண்ணால் பார்த்த 11 காட்சிகள் உதவியுடன் ப்ராசிக்யூஷன் பதிவு செய்துள்ளது. இதில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒரு பரந்த பார்வையுடன் இந்த இரண்டு பயங்கரவாதிகளும், கண்மூடித்தனமாக நகர்ந்து நகர்ந்து மக்களை எவ்வாறு சுட்டுத் தள்ளினார்கள் என்று பார்க்கலாம்.


குடிசைவாசிகளும் தப்பவில்லை:

62. வோல்டாஸ் கம்பெனியில் ஸ்பாய்காம் கார் வேலையில் இருப்பவர் பரத் புதாபாய் வகேலா (பி.டபிள்யூ 103) பத்ருதீன் தயாப்ஜி மார்க் சாலையை அடுத்த ஒரு குடிசையில் இவர் வசிக்கிறார். 2008 நவம்பர் 26ம் தேதி, பத்ருதீன் தாயாப்ஜி மார்க் பின்புறமுள்ள காமா மருத்துவமனை பின் வாசலில் அன்று இரவு சுமார் 9.30 மணிக்கு இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நண்பர் சந்தீப் வர்கீலா, (பி.டபிள்யூ108) காமா மருத்துவமனைக் கட்டிடத்தில் வசிக்கிறார். இன்னொரு நண்பர் பகன் ஷிண்டே அதே குடிசைப் பகுதியில் வசிக்கிறார். இந்த வாசல் அருகே குப்தா என்பவர் பேல்பூரி மற்றும் சிற்றுண்டிகள் விற்றுக் கொண்டிருந்தார். இரவு சுமார் 10.30 மணிக்கு டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடப் பகுதியில் இருந்து இரண்டு நபர்கள் பத்ரூதீன் தாயாப்ஜி மார்க் சாலைக்கு வந்து கொண்டிருப்பதை இவர்கள் பார்த்தனர். இந்த இருவரில் ஒருவன் உயரமானவன். மற்றவன் குள்ளன். இருவர் தோள்களிலும் பைகள் இருந்தது. இதில் குள்ளன் அவர்களை நோக்கிச் சுட்டான். மேலும் இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேல்பூரி குப்தாவை நோக்கிச் சுட்டான். பயந்துவிட்ட வகேலா குடிசையை நோக்கி ஓடினான். அவன் தோழர்களும் அந்த இடத்தை விட்டு ஓடினர். நடந்த நிகழ்ச்சி பற்றி வகேலா தன் தாயிடம் கூறினான். தனது குடிசையின் கதவை முடி, சிறிய இடைவெளியின் மூலம் வெளியே பார்த்தான். தனது குடிசையின் அருகே இருந்த தனது சகோதரர் வீட்டின் அருகில் குள்ள பயங்கரவாதி நிற்பதையும் வீட்டைச் சுடுவதைக் கண்டான். தனது சகோதரரின் கூக்குரல் கேட்டது. நெட்டையன் அந்தச் சந்தில் சுடுவதையும் வகேலா பார்த்தான். சிறிது நேரத்துக்குப் பின்னர் இருவரும் காமா மருத்துவமனை வாசல் கதவுகளை நோக்கிச் செல்வதையும் வகேலே பார்த்தார்.


ரத்த வெள்ளத்தில் சகோதரர்:

63. சிறிதுநேரம் கழித்து வகேலே தனது சகோதரர் தாகூர் வகேலே வீட்டுக்கு சென்றார். தனது சகோதரர் ரத்த வேள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். அவரது 5 வயது மகனும் அங்கு இருந்தான். ஆனால் அவர் மனைவி அங்கு இல்லை. அவரைத் தூக்கிக் கொண்டு வகேலா ஜி.டி. மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்து விட்டனர். 5 நிமிடத்துக்குப் பின்னர் பகன் ஷிண்டே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான். அவனும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
64. பேல்பூரி குப்தா மற்றும் தனது சகோதரனைச் சுட்டது மனுதாரரே (கஸாப்) யென்று வகேலா அடையாளம் காட்டினார். 2008 டிசம்பர் 27ம் தேதி குற்றவாளியை நீதிமன்றத்தின் முன் அடையாளம் காட்டினார். நெட்டையனின் இறந்த உடலையும் ஜே.ஜே. மருத்துவமனையில் ஆறு சடலங்களுக்கு இடையே அடையாளம் காட்டினார். மேலும் நெட்டையனின் அடையாள அட்டையில் இருந்ததும் (ஆர்டிகிள் 61) அவனேயென்றும் அவர் அடையாளம் காட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X