ரூ.350 க்காக கட்டாய ஓய்வு: படைவீரருக்கு மீண்டும் பணி: ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.350 க்காக கட்டாய ஓய்வு: படைவீரருக்கு மீண்டும் பணி: ஐகோர்ட் உத்தரவு

Added : மே 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: 'மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏட்டு, 350 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் இல்லை. வேண்டுமென அவர் மீது குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது. அவரை கட்டாய ஓய்வில் அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் பணி வழங்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சேலம், மேலூர் அண்ணாநகர் ராஜகோபால், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில், (சி.ஐ.எஸ்.எப்.,) ஏட்டாக பணிபுரிந்தார். இவரை, 2009 ஜூன் 30 ல், இன்ஸ்பெக்டர் (நிர்வாகம்) பரிசோதித்த போது, கணக்கில் வராத 350 ரூபாய் இருந்ததாகவும், அதை வெளியில் தூக்கி எறிந்ததாகவும், விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 'யாரிடமும் லஞ்சம் வாங்கியதாக, புகார் வரவில்லை,' என விசாரணை அதிகாரியிடம் ராஜகோபால் விளக்கம் அளித்தார். அவரை பணி நீக்கம் செய்து, தூத்துக்குடி துறைமுக யூனிட் கமாண்டன்ட் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய, சென்னை தென் மண்டல டி.ஐ.ஜி.,யிடம் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். கமாண்டன்ட் உத்தரவை மாற்றியமைத்து, ராஜகோபால் கட்டாய ஓய்வில் செல்ல, 2010 ல் டி.ஐ.ஜி., உத்தரவிட்டார். ராஜகோபால், ''ஜம்மு, காஷ்மீரில் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்க, என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. யார், எதற்கு லஞ்சம் கொடுத்தனர் என தெரிவிக்கவில்லை. எனக்கு லஞ்சம் அளித்ததாக, யாரும் புகார் அளிக்கவில்லை. டி.ஐ.ஜி., மற்றும் கமாண்டன்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என, ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: மனுதாரர் லஞ்சம் வாங்கியதாக, யாரும் புகார் அளிக்கவில்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுள்ளது. லஞ்சம் வாங்கியதாக, நிரூபிக்கப்படவில்லை. அவர் மீது, களங்கம் ஏற்படுத்திட குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது, என தெளிவாகிறது. இது சட்டவிரோதம். அவரை பணிநீக்கம் செய்தது, கட்டாய ஓய்வில் அனுப்பியது ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு மீண்டும் பணி, அதற்கான பலன்கள் வழங்க வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை