'சோலார் பேனல்' வழக்கில் சரிதா நாயர் 'ஆப்சென்ட்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'சோலார் பேனல்' வழக்கில் சரிதா நாயர் 'ஆப்சென்ட்'

Added : மே 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: 'சோலார் பேனல்' மோசடி வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர், நேற்றும், கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த சரிதாநாயர், கோவையில், சூரிய மின்சக்தி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். அவர், கோவையைச் சேர்ந்த இருவரிடம், 31 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர், பிஜூ ராதாகிருஷ்ணன், நிறுவனத்தின் மேலாளர் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல, சரிதா நாயர் மீது, கேரள மாநிலத்தில், 69 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்கள் மீதான வழக்கு, கோவை நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, ரவி ஆஜரானார்; சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. 'கேரளாவை விட்டு வெளியே செல்ல, சரிதா நாயருக்கு, கேரள ஐகோர்ட் பிறப்பித்த தடை உத்தரவு அமலில் இருப்பதால், ஆஜராக முடியவில்லை' என, அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை, ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை