Talpir Singh appointed as new commander | புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்

Updated : மே 14, 2014 | Added : மே 14, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்

புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டத்தில், ராணுவ புதிய தளபதியாக தல்பீர்சிங் சுஹாவை, 59, மத்திய அரசு நியமித்துள்ளது.

ராணுவ தளபதியாகவுள்ள விக்ரம் சிங்கின் பதவி காலம், வரும், ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. வழக்கமாக, ராணுவ தளபதி ஓய்வு பெறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பே, புதிய தளபதியின் பெயர் அறிவிக்கப்படும்.இதுபோல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், புதிய தளபதியின் பெயரை அறிவிப்பதற்கு முயற்சித்தது. ஆனால், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, புதிய தளபதியை நியமிக்க கூடாது' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து, தேர்தல் கமிஷனிடம், மத்திய அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. 'தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும், ராணுவ தளபதி நியமனத்துக்கும், எந்த தொடர்பும் இல்லை' என, தேர்தல் கமிஷன் பச்சை கொடி காட்டியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் கடைசி கூட்டம், நேற்று, டில்லியில் நடந்தது. இதில், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், ராணுவத்தின் புதிய தளபதியாக, தற்போதைய துணை தளபதி தல்பீர்சிங் சுஹாவை நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தல்பீர்சிங் சுஹா, 59, தற்போதைய ராணுவ ஜெனரல்களில், மூத்த அதிகாரி. இவர், வரும் ஆகஸ்ட்டிலிருந்து, அடுத்த, 30 மாதங்களுக்கு ராணுவ தளபதியாக பதவி வகிப்பார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-மே-201404:54:24 IST Report Abuse
villupuram jeevithan நம்ம தளபதிக்கு ப்ரோமோஷன் என்று சொன்னார்களே, அந்த இடத்தில் விக்ரம் வந்துவிட்டாரா? நல்ல வேளை கேப்டன் பதவி தப்பித்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X