ஹைதர் அலிக்கு மீண்டும் சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹைதர் அலிக்கு மீண்டும் சிறை

Added : ஜூன் 14, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை,:கடந்த 1989ல், கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளராக இருந்த வீரகணேஷ் கொலை செய்யப்பட்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி பிரமுகர்கள், கத்தியால் குத்தப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த உக்கடம் ஹைதர் அலி, 45 உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்; ஜாமினில் வந்த ஹைதர் அலி, தலைமறைவானார். அதன்பின் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் ஹைதர் அலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை, சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவினர், கடந்த 2ம் தேதி, பாலக்காட்டில் கைது செய்தனர்.
கோவை வெடிகுண்டு வழக்கு தனி நீதிமன்றத்தில், ஹைதர் அலியை ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க, போலீசார் மனு தாக்கல் செய்தனர்; நீதிபதி, மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதியளித்தார்.விசாரணைக்கு பின், நேற்று காலை, தனி நீதிமன்றத்தில் ஹைதர் அலி ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை