ரூ.3,000 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ., கைது| Dinamalar

ரூ.3,000 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ., கைது

Advertisement

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா, 34, இவரது மனைவி சாந்தி, 31. இவர்களுக்கிடையில், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3ம் தேதி, குன்னம் போலீசில், ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சாந்தி புகார் கொடுத்தார்.குன்னம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜோஸ்வாவை ஸ்டேஷனுக்கு வரவழைத்து, புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 3,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டார். இதுகுறித்து ஜோஸ்வா, அரியலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை, 5:30 மணியளவில், குன்னம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ஜோஸ்வா, எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரனிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement