அரிய வகை சங்குகள் பதுக்கல்:சாயல்குடி அருகே மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிய வகை சங்குகள் பதுக்கல்:சாயல்குடி அருகே மூவர் கைது

Updated : ஜூன் 14, 2014 | Added : ஜூன் 14, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 அரிய வகை சங்குகள் பதுக்கல்:சாயல்குடி அருகே மூவர் கைது

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, கடற்கரை மணலில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட அரிய வகை சங்குகளை பதுக்கிய மூவரை, மெரைன் போலீசார் கைது செய்தனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்குதிரைகள், ஆமைகள், சங்குகள், பவளப்பாறைகள், கடற்பசு, திமிங்கலம் உள்பட 3,600க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க துாத்துக்குடி, ராமநாதபுரம் கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பகம், வன உயிரின அதிகாரிகள், மெரைன் போலீசார் கடலோர பகுதிகளில் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை பகுதியில், அரிய வகை சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மெரைன் போலீஸ் கூடுதல் எஸ்.பி.கனகசபாபதி தலைமையில் போலீசார், நரிப்பையூர் கடல் பகுதியில் இரவில் சோதனை செய்தனர். கடற்கரை அருகே குழி தோண்டி ரூ.30 லட்சம் மதிப்புள்ள 78 மூடைகளில் பதுக்கிய 3,120 வாழைப் பூ, யானை தலை, குதிரை முள்ளி சங்குகள் இருந்தன.விசாரணையில் கீழக்கரை புதுமாயாகுளம் அலிகான், 27, கீழக்கரை ஆறுமுகம், 36, முருகன், 28, ஆகியோர் பதுக்கி வைத்து பின் வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்த சங்குகளை ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை