நாவல் சாகுபடியில் சாதனைரூ. 6 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாவல் சாகுபடியில் சாதனைரூ. 6 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

Added : ஜூன் 15, 2014 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நாவல் சாகுபடியில் சாதனைரூ. 6 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

நிலக்கோட்டை:தமிழ் இலக்கியங்களில் நாவல் பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. சுட்ட பழமா...சுடாத பழமா எனக்கேட்டு, மாடு மேய்க்கும் சிறுவனுக்கும் புத்திசாலித்தனம் உண்டு என்பதை அவ்வை பாட்டிக்கு உணர்த்த, முருகக் கடவுள் பயன்படுத்தியது நாவல் பழத்தை தான். பழம் சிறியது தான்; அதன் மூலம் கிடைத்த ஞானம் பெரிதல்லவா...அவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மெட்டூர் விவசாயி ஜெயக்குமார். இவரது, பண்ணையில் 1.5 ஏக்கரில் குட்டை ரக நாவல் மரங்களையும், மீதி இடத்தில் நெல்லியும் வளர்க்கிறார். தனது நர்சரிக்காக, ஆந்திராவிற்கு செடிகள் வாங்கப் போன போது, பெரிய நாவல் கனியை பார்த்து சாகுபடி செய்ய ஆவல் கொண்டார்.ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்தார்; மரமாகும் வரை இயற்கை உரங்களை மட்டுமே அளித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில், மரத்திற்கு 5 கிலோ பழம் கிடைத்தது. படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, 11 வது ஆண்டிலிருந்து மரத்திற்கு 60 கிலோ பழம் கிடைக்கிறது.பொதுவாக, நாவல் மரம் 40 அடி வரை வளரும்; பழங்களை பறிப்பது சிரமம். இவரது தோட்டத்தில் தொடர் கவாத்து மூலம் மரம் அதிக உயரம் வளரவில்லை; தரையில் அமர்ந்து கொண்டு பழங்களை பறிக்கலாம். ஒவ்வொரு பழமும் 15 கிராம் எடையில், தித்திப்பு அதிகம்.ஜெயக்குமார் கூறுகையில், ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60 கிலோ பழங்களை தாராளமாக பறிக்கலாம். கிலோ 150 ரூபாய்க்கு விற்கிறேன். இரண்டு மாதத்தில் 6.75 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளேன். செலவு போக 6 லட்ச ரூபாய் கிடைக்கும். ஒரு பழத்தின் விலை 2 ரூபாய்,” என்றார். இவரிடம் பேச - 98659 25193.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201402:06:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி விவசாயத்தில் பணமும் பண்ணலாம் என்பதற்கு இவர் உதாரணம். உழைத்தால் உயர்வு உண்டு. அறிவு பூர்வமாக சிந்தித்து உழைத்தால் இவரைப் போல நல்ல உயர்வு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
17-ஜூன்-201401:37:19 IST Report Abuse
ramasamy naicken விலை இல்லா அம்மா நாவல் பழம் கொடுக்கும் திட்டத்தை அம்மா தொடங்குவார@
Rate this:
Share this comment
Cancel
Kolanji Nathan - Chidambaram,இந்தியா
16-ஜூன்-201417:30:02 IST Report Abuse
Kolanji Nathan நல்ல அருமையான டிப்ஸ் நாவல் பழம் ரேட் தான் காஸ்ட்லி
Rate this:
Share this comment
Cancel
பகட்டுவான் - Chennai,இந்தியா
16-ஜூன்-201416:42:31 IST Report Abuse
பகட்டுவான் பிரமிப்பாக தான் இருக்கு. இந்த நவ்வா பழத்தை பறிக்க நான் சின்ன பிள்ளையா இருந்தபோது ரொம்ப ரிஸ்க் எடுத்து மரம் ஏறியது உண்டு. அது என் நினைவில் இருக்கு. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-ஜூன்-201408:04:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இது சுகர் இருப்பவர்களுக்கு அவ்ளோ நல்லது விலை தான் ரொம்பவே அதிகமா இருக்கு 60ரூ கிலோன்னு விக்குராணுக
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
16-ஜூன்-201415:37:52 IST Report Abuse
K.Sugavanamஅவரே கிலோ ரூ.150 க்கு விக்கிறேங்கராறு..நீங்க 60 கே அங்கலாய்க்கிரீங்களே .....
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
16-ஜூன்-201407:05:05 IST Report Abuse
annaidhesam நாவல் பழம் ஹீமோக்ளோபின் அதிகரிக்கவும் , நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கவல்லது ..
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
16-ஜூன்-201415:39:57 IST Report Abuse
K.Sugavanamஅந்த பழத்தின் கொட்டை இன்னும் பயனுள்ளது.காயவைத்து பொடியாக்கி கொண்டு தினம் ஒரு ஸ்பூன் பொடியை ஒரு தம்ளர் தண்ணீரில் கலக்கி தேனுடன் சாப்பிட்டால் இரத்தம் சுத்தியடையும்.சர்க்கரையின் அளவும் கட்டுப்படும்.....
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
16-ஜூன்-201406:26:53 IST Report Abuse
vasanthan சொட்டுநீர் பாசனம், இயற்கை விவசாயம். நவீன உத்திகளுடன் மேலும் மேலும் வளர வேண்டும். வாழ்க வளமுடன். தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
16-ஜூன்-201403:07:45 IST Report Abuse
Manian Mr. Murugaraj, DMR should ask this gentleman to approach Jam makers to prepare Naval Fruit Jam and sell it in foreign country to make more money. He also find out how to make the powder from the pits. Then this approach can be taught to other farmers. Mr. Murugaraj write with social conscientious worker with a good heart and a reporter thus is qualified for this service. It is a tribute to him and were farmers have less water, this fruit will give them a good life. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை