பரதநாட்டியம் ஆடி முதியோரை மகிழ்வித்த 'திருநங்கை'வாய்ப்பு கிடைத்தால் பயிற்சி அளிக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரதநாட்டியம் ஆடி முதியோரை மகிழ்வித்த 'திருநங்கை'வாய்ப்பு கிடைத்தால் பயிற்சி அளிக்க முடிவு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கூடலுார்;கூடலுார், முதியோர் இல்லத்தில், திருநங்கை, ஒருவர் பரநாட்டியம் ஆடி முதியோரை மகிழ்வித்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் திருநங்கை மைதிலி; இவர், பரதம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களில் கற்று, அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தவிர்க்க முடியாத சில காரணங்களால், தற்போது, கூடலுாரில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
தான் கற்ற நடனகலை மூலம், மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் வாழ வேண்டும், என்ற தன்நம்பிக்கையுடன், போராடி வருகிறார். இவரின் நிலையை அறிந்த, கூடலுார் 'பிளசங்' அறகட்டளை நிர்வாகி ஜூலி, அவர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.இந்நிலையில், மேல் கூடலுாரில் உள்ள, ஆசாயபவன் முதியோர் இல்லத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திருநங்கை மைதிலி பங்கேற்று, பரதநாட்டியம் அடி, தன் திறமையை வெளிப்படுத்தி, முதியவர்களை மகிழ்வித்தார்.
திருநங்கை மைதிலி கூறுகையில்,''நான் சிறு வயது முதல், பரதநாட்டியம், குச்சிபொடி, மோகினி ஆட்டம், கேரளா நடனத்தை 10 ஆண்டுகள் கற்றுள்ளேன். கேரளாவில் பல மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்துள்ளேன். தற்போது, கூடலுாரில் தங்கி நடன பயிற்சி அளிக்க வாய்ப்பைஎதிர்நோக்கி காத்திருக்கிறேன்,'' என்றார்.
பிளசிங் அறகட்டளை நிர்வாகி ஜூலி கூறுகையில், 'இவர்கள் போன்று தன்நம்பிக்கையுடன், உள்ளவர்களுக்கு அனைவரும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் மூலம், அவர்கள் திறமை வெளிப்படும். அதற்கான முயற்சியில், ஈடுப்பட்டுள்ளோம். இவரின், நடன பயிற்சி தேவையுள்ளவர்கள், எங்களை அனுகி, அவருக்கு உதவலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை