அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குப்பைத் தொட்டி பயன்படாமல் வீண்: தூய்மை பாரதம் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. அதில், நாவக்குறிச்சி கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட குப்பை தொட்டியானது, தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், பழைய கழிப்பிட கட்டடம் இருந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டும், முறையாக பகிர்ந்தளிக்காததால், அக்கிராமத்தில் தூய்மைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
திருகு இல்லாமல் வீணாகும் குடிநீர்: தலைவாசல், தேவியாக்குறிச்சி கிராமத்தில், இந்திரா நகர் பகுதியில், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள குழாயின், திருகு உடைந்த நிலையில், கட்டையை வைத்து அடைத்துள்ளனர். அதிலுள்ள சிறிய இடைவெளி வழியாக, குடிநீர் கசிந்து வீணாகிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இதே நிலை நீடிப்பதால், நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கீழே செல்கிறது. எனவே, புதிய திருகு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சாலையில் பாயும் சாக்கடை கழிவு நீர்: மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப் பின்புறம், பி.டி.ஓ.,அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேங்கும் மழைநீர்; நோய் பரவ வாய்ப்பு: மகுடஞ்சாவடி, தப்பகுட்டை ஊராட்சிக்குட்பட்ட தாடிகாரனூர் பஸ் ஸ்டாப் அருகே, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், சிறிய அளவில் மழை பெய்தாலும், தண்ணீர் செல்ல வழியில்லாமல் பல நாட்கள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரும் தேங்குவதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

பெரியேரி கிராமத்தில் சாலையில் பள்ளங்கள்: தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்திலிருந்து ஆறகளூருக்கு செல்லும் சாலையை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சிதிலமடைந்த நிலையிலிருந்த சாலை, சீரமைக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியுள்ளது. அதற்குள், 30க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் அதில் தேங்கினால், பள்ளங்கள் பெரிதாகி சாலை சிதிலமடையும் நிலை உள்ளது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X