www.dinamalar.com  |  e-Paper  |  Dinamalarbiz
தினமலர் : செய்திகள் : அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

அமெரிக்க ரிச்மாண்ட் இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி

அக்டோபர் 04,2009,21:37  IST

ரிச்மாண்ட்: அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத் தலைநகர் ரிச் மாண்டில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து கோயிலில் முருகன் சன்னதி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ரிச்மாண்டில் உள்ள இந்தியர்கள், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் பராமரிப்பதிலும் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக விர்ஜினியா இந்து மையம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் நமது கோயில் பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இந்த மண்டபத்தில் கணேசப் பெருமான், வெங்கடேஸ்வரா, சிவன் மற்றும் இதர கடவுளர்களின் விக்ரகங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் முருகனின் படம் அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன் சில பக்தர்கள், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளை வழங்கினர்.
அதன் பின் முருகப் பக்தர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். இந்து மையத்தில் கார்த்திகேயப் பெருமானின் பல விழாக்களைப் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த 4 ஆண்டுகளாக மாதாந்திர கார்த்திகை பூஜைகள், தைப்பூசம், வள்ளி திருமணம், திருக்கார்த்திகை மற்றும் கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
இந்த ஆண்டு ஒரு புதிய பாரம்பரிய கோபுரங்களுடன் கூடிய கோயில் கட்டும் பணி துவங்கி உள்ளது. இந்த பணி 2010ம் ஆண்டு நிறைவு பெறும். புதிய கோயிலில் கார்த்திகேயப் பெருமானுக்கும் ஒரு சன்னதி அமைக்க கோயில் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கோயிலைக் கட்ட பக்தர்கள் தேவையான நிதி உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரம்பரிய கோயிலைக் கட்டவும் ஒரு கல்வி மையம் உருவாக்கவும் இதர வசதிகளைச் செய்யவும் சுமார் 50 லட்சம் அமெரிக்க டாலர் ( 25 கோடி ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோயிலைக் கட்டுவதற்கான நிதியைத் திரட்டும் பணியில் கோயில் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நிதி பெற்றும், நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சிகளை நடத்தும் முயற்சியிலும் அறங்காவலர் குழு ஈடுபட்டுள்ளது. கோயிலை விரைவில் கட்டி முடிக்கவும் அதில் கார்த்திகேயப் பெருமான் சன்னதி அமைக்கவும் பக்தர்களின் ஒத்துழைப்பை அறங்காவலர் குழு எதிர்பார்க்கிறது. பக்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணி சிறப்பாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கொடையாளர்களின் பெயர்கள்: கோயில் கட்டும் பணிக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும் பக்தர்கள் தாங்கள் விரும்பும் 10 பேருடைய பெயர்களை கோயில் தூண்களில் பொறித்துக் கொள்ளலாம். அதேபோல் 500 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கும் பக்தர் ஒரு பெயரை தூண்களுக்கு இடயே உள்ள சுவர் செங்கற்களில் பொறித்துக் கொள்ளலாம்.

இந்த கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியின் மகள் மல்லிகா மூர்த்தி, சேகர் வீரப்பன், சுபா ஸ்ரீதர், அசோக் செட்டி, பி.இலக்குவன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

Sekar M. Veerappan

Hindu Center of Virginia

6051 Springfield Road

Glen Allen, Virginia 23060

USA

- தினமலர் வாசகர் நடராஜ மூர்த்தி

Print this article         |   Font Size: Decrease font Enlarge font         |  More Picture

 

இதர  செய்திகள்  ...


  • நவம்பர் 28, கலிபோர்னியா சிவ-விஷ்ணு ஆலயத்தில் கீதா ஜெயந்தி

  • நவம்பர் 29, சுவிஸில் விசேஷ கலச விளக்கு பூஜை

  • புளோரிடா முத்தமிழ் சங்கத்தில் தீபாவளி கொண்டாட்டம்

  • கனெக்டிகட்டில் தீபாவளி கொண்டாட்டம்

  • ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு

  • துபாயில் தமிழக எம்.பி.,க்கு வ‌ர‌வேற்பு

  • மிசிசிப்பி தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி

  • ஜித்தாவில் இந்திய உணவுத் திருவிழா

  • கலிபோர்னியாவில் பேராசிரியர் இளங்கோவின் இலக்கிய உரை

  • சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்

  • இங்கிலாந்தில் யூ.கே., மக்கள் அமைப்பினரின் தீபாவளி கொண்டாட்டம்

  • உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்ன‌ஸ் சாத‌னை ப‌டைத்த‌ அமீர‌க‌ இந்திய‌ர்

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தில் புனித ஹஜ்/அரஃபா சிறப்பு நிகழ்ச்சி

  • டெக்சாஸில் ஐயப்ப மண்டல பூஜை

  • மலேசியாவில் சிறப்பு யோகாப் பயிற்சி

  • லாஸ் ஏஞ்சல்சில் சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சி

  • துபாயில் 230வது பிரதோஷ பூஜை

  • துபாயில் ஏர் ஷோ 2009



  • மான்ஸா வாழ் இந்தியர் சங்கதின் சார்பில் குழந்தைகள் தினவிழா

  • சிகாகோவில் தீபாவளி கொண்டாட்டம்



  • சிங்கப்பூரில் உலக சமாதான ஆலய கிளை திறப்பு விழா

  • துபாயில் மாத தமிழ்த்தேர் இதழ் வெளியீட்டு விழா

  • டென்மார்க்கில் இசைத்தட்டு வெளியீட்டு விழா

  • நவம்பர் 21, ஜாம்பியாவில் குயாமி ஏக்தா திவாஸ் கொண்டாட்டம்



மேலும் தினமலர் செய்திகள் :
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:


கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம்
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்


திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்


டீ கடை பெஞ்ச்
தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்


டவுட் தனபாலு
பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப


இறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரன் ரூ. 1,040 அதிகரிப்பு
சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்றது. ஒரே மாதத்தில் மட்டும் சவரனுக்கு 1,040 ...


செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட்
சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்


இன்று சர்வதேச ஹலோ தினம்
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&