தினமலர் : செய்திகள் : அரிசோனா தமிழ் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்
அரிசோனா தமிழ் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 02,2009,15:25 IST
அரிசோனா: அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளித் திருநாளை மெஸ்கைட் ஜுனியர் பள்ளியில் அக்டோபர் 24ம் தேதி விமர்சையாக கொண்டாடியது. அரிசோனா தமிழ் சங்க வரலாற்றில் முதன் முறையாக 550 வருகையாளர்களுடன், அரங்கம் நிறைந்த சாதனையாக இந்நிகழ்வு அமைந்தது. நிகழ்ச்சி அரிசோனா தமிழ் பள்ளி ஆசிரியைகளின் தமிழ் தாய் வாழ்த்துடன் நான்கு மணிக்கு தொடங்கியது. தலைவர் சுரேஷ் ரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். அடுத்து அரிசோனா தமிழ் பள்ளியின் நூற்றுக்கு மேலான மாணவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குறிப்பாக ஆப்ரிக்கா காட்டுப்புலி நடனம், அரசவை, உப்பு சத்யாக்ரஹம், வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம், புகை வண்டி நிலைய நாடகம் ஆகியவை மிகவும் சிறப்பாக அமைந்தன. செல்வன் கோகுல்ராமதாஸ் கம்பீரமாக வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலும், செல்வன் யஸஷ் அருண் அமைதியான காந்தி வேடத்திலும் மிகமும் அருமையாக நடித்திருந்தனர். ஜெயஸ்ரீ கணேசனின் குழுவினரின் வட இந்திய நடனம், ராஜி ஸ்ரீனிவாசன் குழுவினரின் கோலாட்டம், கரகாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டம் அனைவரது கை தட்டலையும் பெற்றது. நிகழ்ச்சி, சதீஷ் நாராயணன் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே முடிந்தது. தென்னிந்திய உணவகம் உடுப்பி நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சுவையான இரவு உணவை வழங்கியது. அரிசோனா தமிழ் மக்கள் அனைவரும் அரிசோனா தமிழ் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர் பார்த்த் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல் திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம் திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்
திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்
டீ கடை பெஞ்ச் தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்
டவுட் தனபாலு பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப
செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட் சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்
இன்று சர்வதேச ஹலோ தினம் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&