தினமலர் : செய்திகள் : துபாயில் சனி மகா பிரதோஷ விழா
துபாயில் சனி மகா பிரதோஷ விழா
நவம்பர் 08,2009,14:30 IST
துபாய் : துபாயில் சனிமகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக் கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு பூஜையில் மகான்யாச ருத்ர பாராயணமும் நடைபெற்றது. கணபதி தியானத்துடன் துவங்கிய இப்பூஜையில் பூர்வாங்க பூஜை, சங்கல்பம், வருண ஆவாகணம், மகாயான்யாசம், அஷ்டாங்க நமஸ்காரம், ஸ்ரீ ருத்ர பாராயணம், கும்ப அபிஷேகம், வேத மந்திர பாராயணம், அலங்காரம், அர்ச்சனை, ஸ்தோத்திர பாராயணம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. நல்லெண்ணை, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், பழச்சாறு, சந்தனம், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிவ பெருமானுக்கு சிறப்பான அலங்காரமும் செய்யப்பட்டது. தூப, தீபம், நிவேதனம் ஆகியவற்றைத் தொடர்ந்து சிவ அஷ்டோத்திரம், வில்வாஷ்டகம், சிவஸ்தோத்திரம் ஆகியனவும் நடைபெற்றன. சிவபெருமானுக்கு எள்ளு சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடை, பாயாசம், தயிர் சாதம், பஞ்சாமிர்தம், கேசரி ஆகியன நிவேதனமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இது சனிப்பிரதோஷம் ஆதலால் வழக்கமான பிரதோஷ பூஜைக்கு வருபவர்களை விட பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீஜயன் பூஜைகளுக்கான பொருட்ச்செலவுகளை வழங்கினார். ஈஸ்வர கோபால் மற்றும் அவரது வேதிக் குழுவினர் பூஜைகளை முன்னின்று நடத்தினர்.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல் திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம் திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்
திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்
டீ கடை பெஞ்ச் தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்
டவுட் தனபாலு பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப
செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட் சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்
இன்று சர்வதேச ஹலோ தினம் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&