தினமலர் : செய்திகள் : லண்டன் கந்தசஷ்டி விழாவில் தமிழக பேச்சாளர்
லண்டன் கந்தசஷ்டி விழாவில் தமிழக பேச்சாளர்
நவம்பர் 04,2009,11:35 IST
லண்டன் : லண்டனில் உள்ள பல ஆலயங்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 17ம் தேதி தீபாவளி தினத்தன்று லண்டன் சிவன் கோயிலில் கேதார கெளரி நோன்பு நடைபெற்றது. முந்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகள் ஏற்றி நோன்பினை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த சொற்பொழிவாளர் இளசை சுந்தரம் கேதார கெளரி நோன்பு பற்றி சொற்பொழிவாற்றினார். அறங்காவலர் குழுத் தலைவர் கணேசமூர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
லண்டன் முருகன் கோயில், விநாயகர் கோயில், சிவன் கோயில், முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் கந்தசஷ்டி விழா நடந்தது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. கிழக்கு லண்டன், வால்தம் ஸ்டோ அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவில் இளசை சுந்தரம் சொற்பொழிவாற்றினார். அவரைப் பாராட்டி 'சொற்றமிழ் வேந்தன்' என்ற விருது வழங்கப்பட்டது. ஆலய தலைமை குருக்கள் வரதன் விருதினை வழங்கினார். பின்னர் முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவத்தில் இளசை சுந்தரம் சொற்பொழிவாற்றினார். சைவ முன்னேற்ற சங்கத்திலும் அவர் உரையாற்றினார். சைவ முன்னேற்ற சங்கப் பொறுப்பாளர் தம்பு, சிவன் கோயில் தர்மகர்த்தா கணேசமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல் திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம் திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்
திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்
டீ கடை பெஞ்ச் தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்
டவுட் தனபாலு பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப
செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட் சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்
இன்று சர்வதேச ஹலோ தினம் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&