www.dinamalar.com  |  e-Paper  |  Dinamalarbiz
தினமலர் : செய்திகள் : ஹாங்காங்கில் தமிழர் இயக்கம் நடத்திய விளையாட்டுப் போட்டி

ஹாங்காங்கில் தமிழர் இயக்கம் நடத்திய விளையாட்டுப் போட்டி

நவம்பர் 09,2009,09:46  IST

ஹாங்காங் : ஹாங்காங்கில் யுவராஜ தயாள் தமிழ் கலாச்சார அமைப்பின் சார்பில் 2009ம் ஆண்டிற்கான பேட்மிடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அக்டோபர் 26ம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் வாழும் இந்திய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் கலாச்சார அமைப்பு மற்றும் தயாள் குரூப்ஸ் கம்பெனி ஆகிய அமைப்புக்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் இளைஞர்களுக்கான பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்திய சமுதாய மக்கள் குறிப்பாக தமிழர்களின் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான ஆடைகள், சாதனங்கள் ஆகியவற்றை வழங்கி வரும் தயாள் குரூப்ஸ் கம்பெனி, இப்போட்டிகள் நடத்துவதற்கான பொருட்செலவை வழங்கியது. இந்தியாவிற்கான அயல்நாட்டு துணை தூதர் எல்.டி.ரால்ட், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சீனக் கலைஞர்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியும், இந்திய நடன ஆசிரியர்களிடம் பயின்ற சீன மாணவர்களின் பாலிவுட் நடனமும் இடம்பெற்றது. கின்னஸ் சாதனை நிகழ்த்திய பூவேந்திரனின் யோகா செயல் விளக்கம், நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழ் கலாச்சார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினரும் பேட்மிடன் வீரருமான ரால்ட் ஆகியோர் பங்கேற்ற விளையாட்டுடன் போட்டிகள் துவங்கியது. அனைத்து கழக உறுப்பினர்களின் அயறாத உழைப்பே நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு காரணமாக அமைந்தது. இறுதியில் 3.5 அடி உயரமுள்ள ஸ்ரீ கோவிந்தசாமி நினைவு கோப்பையை ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்ற ராகேஷ் மற்றும் பாபு ஆகியோர் கைப்பற்றினர். வெற்றியாளர்களின் பெயர்கள் :

ஆண்கள் இரட்டையர் போட்டி : ராகேஷ், பாபு
பெண்கள் இரட்டையர் போட்டி : பாவினி ஷா, பிரியனனிக்ரம்
இளைஞர் இரட்டையர் போட்டி : அஸ்வின், கிருஷ்ணா

- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Print this article         |   Font Size: Decrease font Enlarge font         |  More Picture

 

இதர  செய்திகள்  ...


  • மிசிசிப்பி தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி

  • ஜித்தாவில் இந்திய உணவுத் திருவிழா

  • கலிபோர்னியாவில் பேராசிரியர் இளங்கோவின் இலக்கிய உரை

  • சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்

  • இங்கிலாந்தில் யூ.கே., மக்கள் அமைப்பினரின் தீபாவளி கொண்டாட்டம்

  • உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்ன‌ஸ் சாத‌னை ப‌டைத்த‌ அமீர‌க‌ இந்திய‌ர்

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தில் புனித ஹஜ்/அரஃபா சிறப்பு நிகழ்ச்சி

  • டெக்சாஸில் ஐயப்ப மண்டல பூஜை

  • மலேசியாவில் சிறப்பு யோகாப் பயிற்சி

  • லாஸ் ஏஞ்சல்சில் சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சி

  • துபாயில் 230வது பிரதோஷ பூஜை

  • துபாயில் ஏர் ஷோ 2009



  • மான்ஸா வாழ் இந்தியர் சங்கதின் சார்பில் குழந்தைகள் தினவிழா

  • சிகாகோவில் தீபாவளி கொண்டாட்டம்



  • சிங்கப்பூரில் உலக சமாதான ஆலய கிளை திறப்பு விழா

  • துபாயில் மாத தமிழ்த்தேர் இதழ் வெளியீட்டு விழா

  • டென்மார்க்கில் இசைத்தட்டு வெளியீட்டு விழா

  • நவம்பர் 21, ஜாம்பியாவில் குயாமி ஏக்தா திவாஸ் கொண்டாட்டம்

  • சிங்கப்பூரில் இந்திய கலை விழா

  • ஆக்ஸ்போர்டில் தமிழறிஞருக்கு சான்றோர் விருது

  • ஷார்ஜாவில் க‌லாச்சார‌ குழும‌த்தின் க‌லாச்சார‌ நிக‌ழ்ச்சி



மேலும் தினமலர் செய்திகள் :
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:


கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம்
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்


திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்


டீ கடை பெஞ்ச்
தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்


டவுட் தனபாலு
பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப


20 வருடங்களுக்குப் பின் இந்தியாவில் அரிசி இறக்குமதி
டில்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் ...


செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட்
சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்


இன்று சர்வதேச ஹலோ தினம்
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&


முதல் டெஸ்ட் "டிரா' * சச்சின் 30 ஆயிரம் ரன்
ஆமதாபாத்: சச்சின், காம்பிர் தூணாக நின்று சதம் விளாச, முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி சூப்பராக ...