தினமலர் : செய்திகள் : தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள்
தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள்
நவம்பர் 04,2009,11:29 IST
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 6ம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் சுஷ்மாவின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறும். டில்லி ஆர்.ஸ்ரீதர்- வயலின்; டில்லி பி.வெற்றிபூபதி- மிருதங்கம்; டில்லி எஸ்.கோகுல்- கடம்.
8ம் தேதி மாலை 5:30 மணிக்கு தியானம் என்ற ஆவணப்படம் திரையிடப்படும். பின்னர் வாழ்வில் வளமை; சிந்தையில் இனிமை என்ற தலைப்பில் உலக சமுதாய சேவை சங்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம் சிறப்புரை ஆற்றுவார். மத்திய புலனாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் தலைமை வகிப்பார்.
14ம் தேதி மாலை 6 மணிக்கு சங்கப் பயிலரங்க ஆசிரியர்கள் சீதா நாகஜோதி மற்றும் நாகஜோதியின் மாணவர்களின் குச்சிப்புடி நடனம் நடைபெறும்.
15ம் தேதி மாலை 4 மணிக்கு யு.வைத்தியநாத சிவாச்சாரியாரின் கந்தபுராண சொற்பொழிவும் மாலை 6 மணிக்கு குழந்தைகள் தின விழாவை ஒட்டி சிறார்கள் வழங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
22ம் தேதி காலை 10 மணி மதல் மாலை 4 மணி வரை பாவை விழா போட்டிகளும் மாலை 6 மணிக்கு வாணி ஜெயராம் வழங்கும் ஏழு ஸ்வரங்களுக்குள் த்தெனை பாடல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும்.
29ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழிசைப் போட்டிகள் இடம் பெறும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெறும்.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல் திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம் திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்
திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்
டீ கடை பெஞ்ச் தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்
டவுட் தனபாலு பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப
செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட் சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்
இன்று சர்வதேச ஹலோ தினம் எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&