சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா

பிப்ரவரி 14,2017  IST

Comments

சிங்கப்பூர் : ரவிச்சந்திரன் எழுதிய “ வெட்டிக்காடு “ மற்றும் கீதா ரவிச்சந்திரன் எழுதிய “ கீதா கஃபே ஆகிய இரு நூல்கள் அறிமுக விழா பிப்ரவரி 11 ஆம் தேதி தேசிய நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. ஸ்வப்னா ஆனந்த் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய இவ்விழாவுக்கு மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் தலைமை வகித்தார். தமிழக மின்வாரிய மேனாள் தலைமைப் பொறியாளர் எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். தமிழகப் பத்திரிகையாளர் மாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .வெட்டிக்காடு நூலை முனைவர் மன்னை ராஜகோபாலன் அறிமுகம் செய்து உரையாற்றினார். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் அழகுநிலா அறிமுகம் செய்து வைத்தார்.

வெட்டிக்காடு நூலை லிஷா அமைப்பின் தலைவர் ராஜ்குமார் சந்திரா வெளியிட முதல் பிரதியைக் கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகனும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவும் பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.ராமனும் கலைப் பித்தர் கழக மதியுரைஞர் ஆர்.கலா மோகனும் பெற்றுக் கொண்டனர். தமிழக மூத்த எழுத்தாளர் மாலன் சிறப்புரை ஆற்றினார்..படைப்பாளர்கள் ரவிச்சந்திரன் சோமுவும் கீதா ரவிச்சந்திரனும் தக்க வகையில் ஏற்புரை நல்கினர். நிகழ்வினை நதிநேசன் கணேஷ் நாராயணன் நெறிப்படுத்தினார். முன்னதாக லிஷா பேச்சாளர் மன்றத்தைச் சேர்ந்த கே.வி.ராஜா வரவேற்புரையாற்றினார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)