குவைத்தில் 'களம் 52' நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் 'களம் 52' நிகழ்ச்சி

பிப்ரவரி 15,2017  IST

Comments

 குவைத் : பாவேந்தர் கழகத்தின் மாதாந்திர நிகழ்வான “களம்-52”, மங்காஃப் பாவேந்தர் அரங்கில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் அபுதாஹிர் நிகழ்வை தொகுத்து வழங்கினார். பாவேந்தர் கழகப்பெண்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், மஞ்சுளா களப் பாடலும் பாடினார்கள். பாவேந்தர் கழகத் துணைத்தலைவர் நடராஜன் தலைமை ஏற்க, செயற்குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகிக்க, வெங்கட் கடவுள் (Senior Planning Engineer, Worley-Parsons, Kuwait) , ரகுராமன் (Service Manager, Yokogawa, Kuwait) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்ள விழா இனிதே தொடங்கியது. குறளோடுஉறவாடு – அபிநயா உரைக்க, கதைகேளுகனியாகு – பிரியா கண்ணன்(தகவல் தொடர்பு செயலாளர்)நிகழ்த்த, களத்துமேடு - குழந்தைகள் விஷ்வேஷ் பாலாஜி, ஷரோன் பாலாஜி, கவினேஷ், நிகிஷாஸ்ரீ, தனுஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு அசத்த களைகட்டியது களம்.

நினைந்து நினைந்து - கவிக்குயில் சரோஜினி நாயுடு பற்றி, வனிதா அற்புதமாக உரை நிகழ்த்தினார்கள். கவிதைச் சிறகு – “மலரினும் மெல்லியது காதல்” என்ற தலைப்பில் கவிஞர் சிவமணி (ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்) தலைமையில், கவிஞர் அபுதாஹிர் (தலைவர்), உமாதேவி ரவீந்திரன் (பொருளாளர்), சதீஷ்குமார் ஆகியோர் அருமையான கவிதைகளைப் படைக்க இனிதே நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் விருந்தினர்களை அறிமுகம் செய்தவுடன், சிறப்பான உரையை விருந்தினர் நிகழ்த்தினார். இனிதினும் இனிது – தமிழறிஞர் திருவாசு இராமநாதன் “உலகத் தாய்மொழி தின”த்தை முன்னிட்டு மிகச் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. சொல்வோம் வெல்வோம் - செயற்குழு உறுப்பினர் பத்மநாதன் நடத்த, வெற்றிபெற்ற ரமேஷ் க்கு பரிசு வழங்கப்பட்டது. கங்கை.கோபால் வாழ்த்துரை வழங்க, கவிசேய்.சேகர் காதலர் தின கவிதை படிக்க,மஞ்சுளா,ராமகிருஷ்ணன் மற்றும் சண்முகம் அவர்களின் இன்னிசையில் நனைந்தது அரங்கம். இரவு சிற்றுண்டியை சதிஷ்குமார் குடும்பத்தார் வழங்க, விழா நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.
- நமது குவைத் வாசகர் உமாதேவி ரவீந்திரன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)