சிங்கப்பூரில் கதைக் களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கதைக் களம்

பிப்ரவரி 15,2017  IST

Comments

சிங்கப்பூர் : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் மன்ற அரங்கில் பிபரவரி ஐந்தாம் தேதி நடைபெற்றது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகித்தார். முதல் அங்கமாக இம்மாதக் கதைக் களத்திற்கு வந்திருந்த கதைகளும் – சிறு கதை விமர்சனங்களும் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து இம்மாத சிறப்பு சிறுகதையாக கந்தர்வனின் சிறு கதைத் தொகுப்பிலிருந்து “ காடு “ என்ற சிறுகதை வாசிக்கப்பட்டது. வளரும் எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தகைய சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. பின்னர் இம்மாதப் போட்டிக்கான கதைகளும் சிறு கதை விமர்சனங்களும் படிக்கப்பட்டன. கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அவைகளைப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தனர். சிங்கப்பூர் மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தமதுரையில் தமிழக எழுத்துலக ஜாம்பவான்களான தி.ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தன் போன்றவர்களோடு தாம் பழகிய அனுபவத்தை எடுத்துரைத்தார்.

ஜெயகாந்தனின் “ டிரெடில் “ சிறு கதையைக் குறிப்பிட்டு எழுத்தாளர்களுக்கு ஜெயகாந் தனது உத்திகளை விளக்கினார். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிங்கப்பூரின் வரலாற்றைத் தங்கள் படைப்புக்களில் பிரதிபலிக்கும்படி எழுத வேண்டும் என்றும் அத்தகைய சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் தமதுரையில் குறிப்பிட்டார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் குறுநாவல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற பிரேமா மகாலிங்கம் தமது அனுபவங்களை நிகழ்வில் பகிர்ந்து கொண்டார். தலைமை வகித்த நா.ஆண்டியப்பன் தமதுரையில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் – சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியங்கள் குறித்து சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வுரையில் சிங்கப்பூர் படைப்புக்கள் இலக்கிய அந்தஸ்து பெற்றிருப்பதை ஆய்வாளர்கள் நிறுவியதையும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் .இம்மாதப் போட்டிகளில் சிறந்த கதைக்கான முதற்பரிசு தமிழ்ச் செல்விக்கும் இரண்டாவது பரிசு பிரதீபாவுக்கும் கிடைத்தன. சிறந்த சிறுகதை விமர்சனத்திற்கான முதற் பரிசு புவனா குமாருக்கும் இரண்டாவது பரிசு ஹேமாவுக்கும் மூன்றாவது பரிசு அப்பாசாமிக்கும் கிடைத்தன. நிகழ்வினைச் செயலவை உறுப்பினர் கிருத்திகா நெறிப்படுத்தினார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement

தற்போதைய செய்தி

Advertisement

ஜெ., படத்தை அகற்றிய மக்கள்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அதிமுக., எம்.எல்.ஏ., கலைச்செல்வன் அலுவலத்தில் இருந்த ஜெ., படத்தை சில அமைப்பினரும், மக்களும் இணைந்து அகற்றினர்.

சமீபத்தில் ...

பிப்ரவரி 20,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)