பிரான்சில் மஹா சிவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் மஹா சிவராத்திரி

மார்ச் 14,2017  IST

Comments

பாரீஸ் : பிரான்சில் சனாதன பக்த பரிபாலான சங்கத்தாரால் மஹா சிவரத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோஷம் சேர்ந்ததால் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜையும் அதை தொடர்ந்து மாலை 6 மணி தொடங்கி நாலு கால பூஜைகளும் மறுநாள் காலை நிறைவடைந்தது. ஒவ்வொரு கால பூஜைக்கும் பக்தர்கள் தங்கள் குடும்ப பெயர்களை பதிவு செய்து, யாகத்தில் பங்குகொண்டார்கள். ஏழு சிவாசாரியார்களுக்கும் முறையாக வஸ்திரங்கள் காணிக்கைகள் செலுத்தி, இந்த இரவு பூஜைக்காக பிரேதேகமாக அபிஷேகம் மற்றும் பஞ்சக் கொவ்யம் போன்றவைகளுக்கு தேவையான பசும் பால் கோமியம் சாணம் இவைகளை நேரடியாக மாட்டுப் பண்ணையில் கொள் முதல் செய்யப்பட்டது. மந்திரங்கள் முழங்க சிவ பெருமானுக்கு ருத்ரம் மற்றும் பல மந்த்ராபிஷேகம் நடைபெற்றது. எல்லா கால பூஜைகளுக்கும் சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இந்த இரவின் லிங்கோத்பவர் தரிசனத்தில் பக்தர்கள் யாவரும் பரவசம் நிலையை அடைத்தார்கள் என்றால் மிகையாகாது. இளைய தலை முறையினர் பஞ்ச புராணம் பாடி பிற்காலத்தில் தனித்து பாட தங்களை தயார் செய்துக்கொண்டுவருகிறார்கள் என்பது கூடுதல் செய்தி. நாட்டிய அஞ்சலியும் நடைபெற்றது. தியாகராஜன் குழுவினர் இரவு முழுவதும் பஜனை பக்திப்பாடல்களை பாடி பக்தர்களுக்கு துயிலருத்து உற்சாகப்படுத்தினார்கள். பக்தர்கள் யாவருக்கும் பஞ்சாமீர்தம் விபூதி வில்வம் புஷ்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது.யாவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு சிவன் அருள் பெற்ற நிறைவுடன் வீடு சென்றார்கள். - நமது பிரான்சு வாசகர் முத்துக்குமரன்.

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர்பலி

ஐதராபாத்: ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் நீரில் முழ்கி பலியாயினர். ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க ஏரியில் படகு மூலம் ...

ஏப்ரல் 28,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us