சிங்கப்பூரில் பிரதோஷ வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பிரதோஷ வழிபாடு

மார்ச் 15,2017  IST

Comments

சிங்கப்பூர் : சிங்கப்பூர் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் மகா பிரதோஷ வழிபாடு விமரிசையான விழாவாக நடைபெற்றது. சிங்கப்பூர் ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாசி மக விசேஷ பூஜையும் சேர்த்தே நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரே சமயத்தில் நந்தி தேவருக்கும் உமா மகேஸ்வரனுக்கும் பால் – தேன் – சந்தனம் முதலான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாலையில் மாசி மகத்தையொட்டி அருள்மிகு தெண்டாயுதபாணி சர்வ அலங்கார நாயகராக தங்க மயில் வாகனத்தில் அமர்ந்து ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் ஏ.ஆர்.ராமசாமி உள்ளிட்ட அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சூட்கேசை ...

மார்ச் 28,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us