தமிழ் மொழி விழா 2017: சிங்கப்பூரில் சிறப்புப் பட்டி மன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் மொழி விழா 2017: சிங்கப்பூரில் சிறப்புப் பட்டி மன்றம்

ஏப்ரல் 19,2017  IST

Comments

 சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவினர் சிறப்புப் பட்டிமன்றத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி மன்ற கலையரங்கில் ஏற்பாடு செய்திருந்தனர். “ மகிழ்ச்சியாக வாழ்வதை அதிகம் பாதிப்பது நம்முடைய எதிர்பார்ப்புகளே – சமூகத்தின் எதிர்பார்ப்புகளே “ என்பது பட்டி மன்றத்தின் தலைப்பு. நம்முடைய எதிர்பார்ப்புகளே என்ற அணியில் கண்ணன் சேஷாத்திரி – மாணிக்கம் – ரவிச்சந்திரன் சோமு ஆகியோர் பங்கேற்று வாதிட்டனர். ரமா சுரேஷ் – ராஜேஷ் குமார் – கே.வி.ராஜா ஆகியோர் சமூக எதிர்பார்ப்புகளே என எதிர் வாதிட்டனர். முனைவர் மன்னார்குடி ராஜ கோபாலன் நடுவராக வீற்றிருந்து பல இலக்கியச் செறிவான கருத்துக்களைக் குறிப்பிட்டு – இருதரப்பு வாதங்களையும் திறனாய்வு செய்து தனி மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகம் பாதிப்பது சமூகத்தின் எதிர்பார்ப்புகளே எனத் தீர்ப்பளித்தார். முன்னதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிவா வரவேற்புரை ஆற்றினார். நாடாளு மன்ற உறுப்பினர் அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். சேகர் – செந்தில் ஆகியோர் நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா

தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா...

சரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி

சரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி...

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி...

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா ...

Advertisement
Advertisement

ஆற்றில் மூழ்கி தந்தை-மகன் பலி

கரூர்: கரூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகன் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர்.

கரூர் மாவட்டம் அரவகுறிச்சியை சேர்ந்த சக்திவேல், இவரது மகன் கதிரேசன் ஆகியோர் ...

அக்டோபர் 18,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)