ஆக்லாந்தா அயோத்தியா மண்டபமா? | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தா அயோத்தியா மண்டபமா?

மே 18,2017  IST

Comments

ஆக்லாந்து: ஆக்லாந்து ஷீரடி பாபா கோயிலில், பஜன் ஸத்சங்கம் மாபெரும் மகா ருத்ர ஹோமத்தை 2 நாட்கள் திறம்பட நடத்தினர். இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 1331 முறை ருத்ர ஜெபம் செய்தனர். இரண்டு நாட்களும் காலை ஆறு மணியளவில் தொடங்கி மதியம் மூன்று மணி வரை நடைபெற்றது. முதல் நாளன்று 66 வேத விற்பன்னர்கள் 6 குழுவாக அமர்ந்து 11 முறையும் இரண்டாம் நாளன்று 55 வேத விற்பன்னர்கள் 5 குழுவாக அமர்ந்து 11 முறையும் வேதம் மற்றும் ருத்ரம் ஜபித்து சிவனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் இரண்டு நாட்களும் நடைபெற்றது. இரண்டாம் நாளன்று சந்துரு தலைமையில் பதினோரு பேர் அமர்ந்து மகா ருத்ர ஹோமம் நடத்தினர். சனிக்கிழமையன்று மாலை வேத விற்பன்னர்கள் யாவரும் தைத்தீரிய உபநிஷத் ஓதியும் லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனையும் சிறப்பாக நடைபெற்றது. அனை த்து பக்தர்களுக்கும் இரண்டு நாட்களும் காலை மதியம் மற்றும் மாலை உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிக குளிரையையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக கலந்து கொண்டு இந்த வைபவத்தை கண்டு மூழ்கி திளைத்தனர். இந்த வைபவம் இரண்டு நாட்களும் சிறப்பாக சந்துரு வாத்தியார் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் சந்துரு பாராட்டி பேசினார். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நிறைய இளைஞர்கள் கலந்து கொண்டு ருத்ரம் ஓதியதை பாராட்டினார். இறுதியில் இம்மாபெரும் நிகழ்ச்சியை திறம்பட நடத்திய வெங்கடாச்சலம் மற்றும் அவரது மனைவி கவிதாவையும் பாராட்டி வாழ்த்தினார்.

- தினமலர் வாசகி சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)