லய இசையில் லயித்த மெல்பேர்ண் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

மே 18,2017  IST

Comments

மெல்பேர்ண்: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில், இந்திய கலைக்கழக மாணவர் கணாதீபனின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. நிரம்பி வழிந்த அரங்கில், கணாதீபனின் சகோதரி சுபானு மகேஸ்வரன் வரவேற்புரை வழங்க, குரு. யோகராஜா கந்தசாமி அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார். நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலை ஆட, மேடையில் பாடகர் அகிலன் சிவானந்தன், கணாதீபன் மகேஸ்வரன் அணி இசைக் கலைஞர்கள், ஆதி தாளத்தில் அமைந்த நவராகமாளிகா வர்ணத்தோடு நிகழ்வை ஆரம்பித்து, கெளலா ராகத்தில் அமைந்த முத்துசுவாமி தேசிகரின் பாடலான மகா கணபதியோடு தொடர்ந்தனர்.

பாடகர் அகிலன் சிவானந்தனின் சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த தாயே திரிபுர சுந்தரி என்ற பாடலும், பேகாக் ராகத்தில் அமைந்த ஆடும் சிதம்பரம் பாடலும் சபையோரை கட்டி வைத்துவிட்டது. கணாதீபனின் அமைதியான ஆனால் லாவகமான வாசிப்பு அவரது திறமையையும் குருவின் பயிற்சியையும் புடம்போட்டு காட்டியது. இடைவேளைக்கு ஹிந்தோலா ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு ஆரம்பித்த நிகழ்வு சந்திர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.

தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தது. கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்தார். தொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது.

பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம், வயலின் வாசித்த பத்ரி, கஞ்சிரா வாசித்த தென்காசி ஹரிகரன் பரமசிவம், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம்.தீனதயாளு, கடம் வாசித்த உள்ளுர் கலைஞரான திவாகர் யோகபரன், தம்புரா வாசித்த கீர்த்தனா ராஜசேகர், நிவாஷன் தயாபரன் பார்வையாளர்களை தங்கள் பங்கிற்கு பரவசப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளி நிறுவனர் ஷோபா சேகர், சிறப்பு விருந்தினராக கனடா சுப்ரமணியம் ராஜரட்ணம் பங்கேற்றனர்.

- தினமலர் வாசாகர் சித்தம் அழகியான்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா...

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா...

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஸ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா...

Advertisement
Advertisement

ஆத்தூர் அருகே சூறாவளிக்கு பெண் பலி

ஆத்துார்: ஆத்துார் அருகே சூறாவளிக்காற்று அடித்ததில் தகரசீட் தாக்கி பெண் பலியானார்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கெடாவூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ...

மே 22,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)