இந்து கடவுளரை அவமதித்த அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கேட்டது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்து கடவுளரை அவமதித்த அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கேட்டது

மே 18,2017  IST

Comments

நெவாதா: அமெரிக்கா, நியூ ஜெர்சி மாகாணம் வென்ட்னார் நகரில் உள்ள ஜேஸி ஆடை தயாரிப்பு நிறுவனம் தயாரித்த லெக்கின்ஸில், சிவபெருமான், கணேசர் படங்களை வரைந்திருந்ததற்கு மன்னிப்பு கேட்டு, அந்த லெக்கின்ஸ்களை திரும்ப பெற்றுக் கொண்டது.

பெண்கள் அணியும் லெக்கின்ஸில் சிவபெருமான் மற்றும் கணேசர் படங்களை வரைந்து விற்பனை செய்த ஜேஸி நிறுவனத்திற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மகாமணத்தில் உள்ள வென்டனார் நகரில் செயல்படும் இந்த நிறுவனம் இவ்வாறு இந்து கடவுளர் படங்களை லெக்கின்ஸில் வரைந்திருப்பது இந்துக்களை அவமதிப்பதாகும் என்று இந்துக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.பிரபஞ்ச இந்து சமுதாயத் தலைவர் ராஜன் ஜெட் இது குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்து மதத்தில் சிவபெருமானும் கணேசரும் பெரிதும் வழிபடப்படும் கடவுளர்கள். கோயில்களில் வைத்து வழிபட வேண்டிய இந்த கடவுளர் உருவங்களை இவ்வாறு லெக்கின்ஸில் வரைந்திருப்பது மிகவும் தவறு. இவ்வாறு வர்த்தக ரீதியாக கடவுளர் படங்களைப் பயன்படுத்துவது பொருத்தமற்றமது மட்டுமல்ல; இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதுமாகும். எனவே இந்த லெக்கினஸ் தயாரிக்கும் ஜேஸி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த மத அடையளங்களையும் அவமரியாதை செய்வது தவறு, என்று குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜேஸி ஆடை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஷியானா குரோஸ், ராஜன் ஜெட்டுக்கு அனுப்பியுள்ள மெயிலில், லெக்கின்ஸ்களில் சிவபெருமான், கணேசர் படங்கள் வரையப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; அந்த லெக்கினஸ்களின் படங்கள் எங்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன. அநத லெக்கின்ஸ்கள் உற்பத்தி மற்றும் விற்பனையையும் நிறுத்தி விட்டோம். நாங்கள் எவர் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் இதைச் செய்ய வில்லை. எங்களுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)