துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத தின சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத தின சிறப்பு நிகழ்ச்சி

மே 19,2017  IST

Comments

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

துபாய் இந்திய துணை தூதரகம் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் சமஸ்கிருத மொழி படிக்க விரும்பும் இந்தியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து பயிற்சியினை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.


இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் சமஸ்கிருத பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய துணை தூதரகம் இந்திய கலை, கலாச்சாரத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உதவும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இந்திய பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டார்.



அதனைத் தொடர்ந்து இந்திய மாணவ, மாணவியர் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புராணங்களின் கதைகள் குறித்த விபரங்களை தத்ரூபமாக கொண்டு அவர்கள் நடித்தனர்.


இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


சமஸ்கிருத வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறினர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக...

நவம்பர் 20 ல் அபுதாபியில் ரத்ததான முகாம்

நவம்பர் 20 ல் அபுதாபியில் ரத்ததான முகாம்...

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா.

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா....

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து...

Advertisement
Advertisement

சட்டசபையை கூட்ட வேண்டும் : ஸ்டாலின்

மதுரை: மதுரையில் நிருபர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: கவர்னர் ஆய்வு செய்தது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பது தான் எனது கருத்து. ...

நவம்பர் 21,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)