சிங்கப்பூர் ஆலய வருஷாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆலய வருஷாபிஷேகம்

மே 23,2017  IST

Comments

சிங்கப்பூரின் மையப் பகுதியில் பல இன சமுதாய மக்கள் வாழும் சூழலில் அமைந்துள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் பதினோரு நாள் பக்திப் பிரவாகமாக – கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூரில் முதன் முறையாக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் போற்றிடும் ஸ்ரீ மாதா மஹா ராஞ்ஞி ஸ்ரீ மஹா மாரியம்மன் மகா யாகம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு யாகம் நடைபெற்றது. ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி மகா யாகம் – ஸ்ரீ ராஜ மாதங்கி மகா யாகம் – ஸ்ரீ வித்யா மகா யாகம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி – ஸ்ரீ சரஸ்வதி – ஸ்ரீ பெரியாச்சி – ஸ்ரீ நாகர் – ஸ்ரீ நாகேஸ்வரி யாகம் – ஸ்ரீ மகாலட்சுமி யாகம் – ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம் – ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ நவக்கிரக யாகம் – ஸ்ரீ விசாலாட்சி – விஸ்வநாதர் – சண்டிகேஸ்வரர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் – ஸ்ரீ அஷ்டாதசபுஜ கனகதுர்க்கை – ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா யாகம் முதலியன நடைபெற்றன. கலசாபிஷேகம் நிறைவு பெற்று ஷோட சோபசார அலங்கார மகா தீபாராதனையும் ஸகஸ்ர தீப புஷ்பாஞ்சலியும் நடைபெற்றபோது பக்தர்கள் முழங்கிய “ ஓம் சக்தி ...ஓம் சக்தி “ சரண கோஷம் அடங்க நெடுநேரமாயிற்று. முத்தாய்ப்பு நிகழ்வாக ஸ்ரீ விநாயகர் – முருகன் – ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சகிதமாக அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் மங்கல வாத்தியம் முழங்க சர்வ அலங்கார நாயகியாகப் பொன்மேனியாய் ஜொலிக்க ஆலயம் வலம் வந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஆலய மேலாண்மைக்குழுத் தலைவர் கல்யாணி ராமசாமி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பார்வதி ஆனந்தும் விரிவாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

தூக்கு தண்டனை முறையே சரி: மத்திய அரசு

புதுடில்லி: மரண தண்டனையை முறையை மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், மரண தண்டனையை ...

ஏப்ரல் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)