சிருங்கேரி வித்யா பாரதி பவுண்டேசன் கோவில், ஸ்ரட்ஸ்பர்க், பென்னின்ஸ்லேனியா, அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிருங்கேரி வித்யா பாரதி பவுண்டேசன் கோவில், ஸ்ரட்ஸ்பர்க், பென்னின்ஸ்லேனியா, அமெரிக்கா

ஜூலை 03,2017  IST

Comments

சிருங்கேரி சாராதா மையம் என்ற பெயரில் அழைக்கப்படும் சிருங்கேரி வித்யா பாரதி பவுண்டேசன், அமெரிக்காவில் பென்னின்ஸ்லேனியா மாகாணத்தி்ல் ஸ்ரட்ஸ்பர்க் என்ற இடத்தில் பிரமாண்டமான திருக்கோவில் ஒன்று அமைத்துள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ சாராதா பீடத்தின் விரிவாக்கமாக இந்த ஸ்தாபனம் செயல்படுகின்றது. இது ஒரு இலாப நோக்கமின்றி செயல்படும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.

இத்திருத்தலத்தில் அருள்மிகு ஸ்ரீ சாராதாம்பா முக்கிய சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். அம்பாள் சன்னதியின் முன்பு இராகவேந்தருக்கு பெரிய அளவில் திரு உருவச் சிலை அமைந்துள்ளது. அம்பாளின் இடப்புறத்தில் உள்ள சன்னதியில் எம்பெருமான் சந்திர மௌலீஸ்வரர் பக்தர்களை அருள் பாலிக்கின்றார். சிவபெருமானுக்கு வலப்புறத்தில் சிவாலயங்களில் காண்பது போல் சண்டிகேஸ்வரர் இருப்பதைக் கண்டு வழிபட்டுச் செல்லலாம்.இத்தலத்தில் நவகிரகம்,வள்ளி தெய்வானை சுப்பிரமணியர்,மகா கணபதி, ஆஞ்சநேயர், இராமர்,சீதை,கிருஸ்ணர்,தேவி பாவாணி ஆகிய அருள்மிகு தெய்வங்களை வழிபடுவதற்கு தனித்தனி சன்னதிகளில் மூர்த்திகள் உள்ளன. திரு ஆதி சங்கரருக்கு இத்தலத்தில் மூர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இங்கு மகாகணபதி, சந்திரமௌகஸ்வரர்,சுப்பிரமணியர்,ஆஞ்சநேயர், திரு ஆதி சங்கரர்,தேவி பாவாணி ஆகியோர்களுக்கு அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த நாட்களில் அபிசேகம் நடத்துவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். பொதுவாக தலத்தில் அனைத்து நாட்களிலும் அபிசேகம் நடைபெறுகின்றது என்று கூறினால் அது சாலப் பொருத்தமாகும்.


கணபதி ஹோமம், லலிதா சகஸ்ரநாமம், சாராதம்பாள், சந்திமௌலீஸ்வரர் பூஜை மகா மங்கள ஆராத்தி போன்றவைகள் தினமும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். குருபூர்ணிமா, மகா சிவராத்திரி, சங்கர ஜெயந்தி போன்ற விழாக்களும் மிக சிறப்பாக நடத்தப்படுகின்றது.


இத்திருத்தலத்தில் உள்ள குருக்கள், பொதுமக்களின் அழைப்பின் பேரில் வந்து, சண்டி ஹோமம் தவிர்த்து மற்ற ஹோமங்கள், சீமந்தம், உபநயனம், திருமணம், சத்ய நாராயண பூஜை, கிரகபிரவேசம், பிறந்த நாள் விழா, 60,70,80 வயதில் நடத்தப்படும் திருமணங்கள், தர்பணம் போன்றவற்றை நடத்தி வைக்கின்றனர். கலைநிகழ்ச்சிகளும் இத்தலத்தில் நடத்துவதற்கு வசதிகள் உள்ளன. இவற்றிற்கு முன் அனுமதி தேவைப்படுவதுடன் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மகாபிரசாதம் இங்கு வினியோகிக்கப்படுகின்றது.


சுமார் 34 ஏக்கர் நிலப்பரப்பில், மலைபாங்கான பசுமை எழில் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், பசுக்கள் பாராமரிக்கப்படுகின்ற கோசாலை தனியாக இயங்குகின்றது. கோசாலையில் இருந்து பெறப்படும் பசுவின் பால் மட்டும் கோவிலின் அபிசேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. பகவத்கீதை,ஆன்மீக தத்துவங்கள்,வேதங்கள் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக கூறப்போனால்,இந்து சாஸ்திரம் வேத தர்மங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஸ்ரீசாரதா இளைஞர் சேவையின் அமைப்பு இத்தலத்தில் சமுக சேவைகளை செய்து வருகின்றது. இத்திருத்தலத்தின் கும்பாபிசேகம் 04.07.2008 அன்று நடத்தப்பட்டுள்ளது. வருடாந்திர மகாருத்திரம் 07.06.2016 நடைபெற்றுள்ளது.


திருத்தலத்தின் நடை திறந்திருக்கும் நேரம் வார நாட்களில் காலை 08.30 முதல் 11.30 மணி வரை. மாலை 16.30 முதல் 20.30 மணி வரை. வாரக்கடைசி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் காலை 08.30 முதல் மாலை 20.30 வரை திருத்தலம் திறந்திருக்கும்.


திருத்தலம் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 570 629 7881. நியூஜெர்ஸியில் உள்ள குருவாயூரப்பன் திருத்தலத்தை தரிசிக்க வரும் மெய்யன்பர்கள் அவசியம் 115 மைல் தூரத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு வந்து அருள்மிகு சாராதாம்பாளை தரிசித்துச் சென்றால், கர்நாடாவில் உள்ள சிருங்கேரிக்கே சென்று வந்தது போன்ற உணர்வுகள் ஏற்படும் என்பது திண்ணம். இங்கிருந்து பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாளையும், மற்றும் அங்கு அமைந்தள்ள ஸ்ரீரடி சத்ய சாய் பாபாவையும் தரிசிப்பதற்கு சுமார் 300 மைல் தூரம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் கந்த சஷ்டி கோலாகலம்

சிங்கப்பூரில் கந்த சஷ்டி கோலாகலம்...

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்...

பிரிஸ்பேனில் சலங்கை பூஜை

பிரிஸ்பேனில் சலங்கை பூஜை ...

துபாய் தேவாலயத்தில் நடந்த அறுவடைத் திருவிழா

துபாய் தேவாலயத்தில் நடந்த அறுவடைத் திருவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)