ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர், லண்டன்

ஜூலை 11,2017  IST

Comments

பல்லவர்களின் சிற்ப கலைக் கூடம் பார்ப்பதற்கு நாம் மகாபலிபுரம் செல்வதுண்டு. கடல் கடந்து வந்து இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வாழ் மக்களும், உலகின் பல்வேறு பிரஜைகளும் நமது பாரதத்தின் சிற்ப கலையினை கண்டு ரசித்து மகிழ்வதற்காக உருவாக்கப்பட்ட தலம் போல் இருக்கும் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் உண்மையிலேயே மிகவும் வியக்கத்தக்க வண்ணம் லண்டனில் அமைந்தள்ளது. இத்தலத்தின் கட்டுமானத்திற்கு இத்தாலி, இந்தியா. பல்கேரியா போன்ற நாட்டிலிருந்து மார்பிள் கற்கள் தருவிக்கப்பட்டுள்ளன. அனைத்து சிற்ப வேலைப் பாடுகளும் இந்தியாவில் முடிக்கப்பட்டு, அதன் பின் இங்கு கொண்டு வரப்பட்டு, திருத்தலத்தின் கட்டிட வேலைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இத்தலம் 20.08.1995 அன்று திறக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலம்; எண் 105-119 பிரிண்ட்பீல்டு சாலை,நிய்யாஸ்டென், லண்டன் என்ற இடத்தில் கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது. திருத்தலத்தின் எதிர்புறம் உள்ள சாலையை தாண்டியவுடன் அமைந்திருக்கும் மிகப் பெரிய மைதானத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இலவசமாக நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளன. ஜனசஞ்சரம் மிகுந்த லண்டன் மாநகரில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதிகள் இல்லாமல் சாலையிலேயே நிறுத்துவதால், இங்கு தரப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் கண்டு பூரிப்பு அடையலாம். இதன் அருகில் இந்திய உணவுக்கூடம் அமைந்திருப்பது பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.


இத்தலம் செல்வதற்கு, பல்வேறு பகுதிகளில் உள்ள, பள்ளிக்கூடம் கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆசிரியர்களும் உடன் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நமது கலாச்சாரம், ஆன்மிகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு அடைவதற்கு உரிய வழிமுறையில் தகுந்த முறைப்படி, முன் திட்டமிட்ட திட்டங்களின் படி, போதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு இத்தலத்திற்கு வரும் அனைவரும் இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் பற்றிய தெளிவான ஞானங்களைப் பெற்றுக் கொள்வதுடன் தங்களது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்கின்றனர்.


மேலும் இந்த அமைப்பால் நடத்தப்படும் சொந்தப் பள்ளிக்கூடங்களில் இந்திய வாழ் இங்கிலாந்து குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெரும் போட்டி உள்ளது என்பது ஒரு உண்மை நிலைப்பாடு ஆகும். இதற்கு முக்கிய காரணம் பள்ளிக் கல்வியுடன் இந்து கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுப்பது தான் என்று உறுதியாக நாம் கூறலாம். வடஇந்திய அமைப்பில் திருத்தலம் அமைந்திருந்தாலும், அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு இங்கு மூர்த்திகள் உள்ளன. பூஜை பொருட்கள், பரிசுப் பொருட்கள், சுவாமி படங்கள். சாமிகளின் உருவச்சிலைகள் ஆகியவற்றை இங்குள்ள விற்பனைக்கூடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


இத்திருத்தலம் வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரையும்,சனி ஞாயிறு போன்ற தினங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 18.00 மணி வரையும் திறந்திருக்கும். திருத்தலத்தின் நுழைவு கட்டணமாக 2 பௌண்டும், 6 முதல் 16 வயதினையுடையவர்களுக்கும், முதியோர்களுக்கும் 1.5 பௌண்டும் வசூலிக்கப்படுகின்றது. மேலும் திருத்தலம் பற்றிய செய்திகளுக்கு அணுக வேண்டிய கையகப்பேசி எண் 020 8965 2651.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஷார்ஜாவில் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜாவில் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி...

சிங்கப்பூரில் மாசிமக பிரம்மோற்சவ விழா

சிங்கப்பூரில் மாசிமக பிரம்மோற்சவ விழா...

அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வருடாந்திர விளையாட்டு விழா

அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வருடாந்திர விளையாட்டு விழா...

ஹாங்காங்கில் சமையல் போட்டி

ஹாங்காங்கில் சமையல் போட்டி...

Advertisement
Advertisement

நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் சசிகலா

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன், கவலைக்கிடமாக உள்ளார் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ...

மார்ச் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)