சிங்கப்பூரில் ஆடிக்கூழ் ஊற்று விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஆடிக்கூழ் ஊற்று விழா

ஜூலை 20,2017  IST

Comments

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். “ சக்தி “ மாதம் என்றே ஆன்மிக அறிஞர்கள் போற்றும் மாதம். சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆடி மாதம் முழுவதும் விழாக் கோலம் பூணும். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிம்ம வாஹினியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கூழ் படைத்தல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அனுக்ஞை – விக்னேஸ்வர பூஜையுடன் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி யாகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பக்தர்கள் படைத்த ஆடிக்கூழ் கலயங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பூஜிக்கப்பட்ட கலயங்கள் மங்கல வாத்தியத்துடன் ஆலயம் வலம் வரப்பெற்றது. பின்னர் கலசாபிஷேகம் நடைபெற்றது. “ ஓம் சக்தி “ சரண கோஷம் முழுங்க அன்னை ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை கோலாகலமாக நடைபெற்று திரளாகக் கூடியிருந்த பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)