ஆஸ்திரேலியாவில் கிருஷ்ண ஜெயந்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலியாவில் கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 18,2017  IST

Comments

மெல்போன்: ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், மெல்போனில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

காலை 08:30 மணிமுதல் இரவு 1 மணி வரை கீர்த்தனைகள் பாடப்பட்டன; ஸ்வாமி தரிசனமும் நடைபெற்றது. இடையில் அலங்காரத்திற்காக மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் இரவு 10 மணிக்கும் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10:30 மணி முதல் கிருஷ்ணரண தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அபிேஷகமும் நடைபெற்றது.


கிருஷ்ணர் தொடர்பான நூல்கள் படித்தல், யாகம், வேதாகம சடங்குகள் ஆகியவையும் இடம் பெற்றன. மாலை 07:15 மணி முதல் இரவு 11 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பக்தர்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா பிரசாதம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. நள்ளிரவு பூஜை வரை பக்தர்கள் சிரமம் இன்றி தரிசிக்க தொண்டர்கள் துணை புரிந்தனர்.



- நமது செய்தியாளர் முருகன்.என்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக

டிசம்பர் 9 ல் ஒரு மாலை மாற்றுத் திறனாளிகளுக்காக...

நவம்பர் 20 ல் அபுதாபியில் ரத்ததான முகாம்

நவம்பர் 20 ல் அபுதாபியில் ரத்ததான முகாம்...

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா.

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா....

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)