சுவிட்சர்லாந்து மர்த்தனியில் ஞானலிங்கேச்சுரர் கோவில் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுவிட்சர்லாந்து மர்த்தனியில் ஞானலிங்கேச்சுரர் கோவில் திருவிழா

செப்டம்பர் 14,2017  IST

Comments

 

மர்த்தினி: சுவிட்சர்ர்லாந்து நாட்டில் வலே மாநிலத்தில் 150க்கும் உட்பட்ட தமிழ்க்குடும்பங்கள் கூடிவாழும் மர்த்தினி நகரில் இவ் ஆண்டு இரண்டாவது தடவையாக ஞானலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடைபெற்ற பொற்றடை அழகொப்பனைத் திருவிழாவில் முதற்தடவையாக தேரில், ஞானலிங்கப்பெருமான், ஞானாம்பிகையுடன் உலா வந்தார். மறுநாள் திருமுழுக்கு விழா (தீர்தத்திருவிழா)வும் அதற்கு அடுத்தநாள் திருக்கல்யாணமும் தொடர்நது வைரவர் பெருஞ்சாந்தி விழாவும் நடைபெற்றன.

மர்த்தினி நகரின் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், நகரசைபத் தலைவர், உறுப்பினர்களும் வலே மாநில சைவநெறிக்கூடத்தின் அழைப்பினை ஏற்று தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்தனர். பேர்ன் நகர சைவநெறிக்கூடம், ஞானலிங்கேச்சுரர் கோவில் முரளிதரன், தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோருடன் மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் கோவில் இரத்தினசபாபதி பாலகுமாரன், கனகரத்தினம் பகீரதன், கணேசமூர்த்தி விஜயகுமார் ஆகியோர் விழாக்காலச் சடங்குகளை தமிழில் நடத்தினர். இலங்கையிலிருந்து வந்திருந்த மதுசூதனன் இசைக்குழுவினர் மங்கல இசை வழங்கினர்.

தேரில் இருந்து பெருமான் பச்சை அணிந்து கீழிறங்கி கோவிலுக்குள் நுழைந்ததும் மர்த்தினி வாழ் இளைஞர்கள் இசைவேள்வி நடத்தினர். இராசையா மகேஸின் மாணவர்களின் கலைத்திறன் இதில் வெளிப்பட்டது.

- தினமலர் வாசகர் தில்லையம்பலம் சிவகீர்த்தி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

கலாம் நினைவிடத்தில் கமல் மரியாதை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து அவர் படித்த பள்ளியை, வாசலில் இருந்து ...

பிப்ரவரி 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)