சிங்கப்பூரில் பாரதியார் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பாரதியார் விழா

செப்டம்பர் 12,2017  IST

Comments

 சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் மகா கவி பாரதியார் விழாவை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கோலாகலமாக நடத்தியது. ஸ்வப்னா ஆனந்த் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. புக்கிட் பாத்தோ தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் கே. முரளிதரன் பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாரதியார் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் சமுதாயத்துக்கும் பாடிய பாடல்களைக் குறிப்பிட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி அசத்தினார். புரவலர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.

தமிழக ஆவணப் படத் தயாரிப்பாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையில் பல புதிய செய்திகளைக் குறிப்பிட்டதோடு பெண்பாற் புலவர்களும் பாடாத பெண் விடுதலையை முதலில் பாடியவர் பாரதியார் என்றும் விதி விலக்குகளின் தொகுப்பு அவரென்றும் உணர்வு பொங்கக் குறிப்பிட்டதோடு “ சந்திரிகை “ எனும் நாவலை உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து 50 பக்கம் மட்டும் எழுதிய நிலையில் காலன் கவியரசரைக் காவு கொண்டு விட்டான் எனக் கூறும்போது அரங்கமே சோகமயமாயிற்று. பாரதியாரின் தந்தையார் சின்னச்சாமி அய்யர் எட்டயபுரம் வந்ததே தாம் கண்டு பிடித்த புதிய கருவியின் மூலம் பஞ்சாலை அமைக்கத்தான் என்றும் வெள்ளைய ஏகாதிபத்தியச் சதியால் அது இயலாமற் போயிற்று என்ற செய்தியையும் தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.

பதினேழாவது ஆண்டாகத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தால் பாரதியார் விழா நடத்தப்படுவது குறிப்பிடத் தகுந்ததாகும். அமைப்பின் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். இலங்கை நாட்டுக்கான மொரிஷியஸ் மேனாள் தூதர் ஈஸ்வரன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இவ்விழாவிற்கெனவே வருகை புரிந்து சிறப்பித்தார். ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சீதா லட்சுமி நன்றி நவின்றார். சந்தானம் ராம்குமார் – அநுராதா வெங்கடேசன் ஆகியோர் நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா.

டிசம்பர் 2 ம் தேதி தமிழர் புனர்வாழ்வுக்கழக பரத விழா....

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து...

நவம்பர் 25 ல் கார்த்திகை மாத இலக்கிய கலந்துரையாடல்

நவம்பர் 25 ல் கார்த்திகை மாத இலக்கிய கலந்துரையாடல்...

நவம்பர் 23 ம் தேதி பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 92 வது ஜெனன தினம்

நவம்பர் 23 ம் தேதி பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் 92 வது ஜெனன தினம்...

Advertisement
Advertisement

ஆதாரத்தின் அடிப்படையிலேயே சோதனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஜ்ணன், ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனைக்கு அரசியல் ...

நவம்பர் 18,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us