சிங்கப்பூரில் சிறுவர் கலை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சிறுவர் கலை நிகழ்ச்சி

செப்டம்பர் 21,2017  IST

Comments

சிங்கப்பூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷனில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சாரதா ஹாலில் நடைபெற்ற இவ்விழா வேத பாராயணத்துடன் தொடங்கியது. பஜனைகள் தொடர்ந்தன. சிறுவர்கள் பங்கேற்ற சுதாமாவும் கிருஷ்ணனும் எனும் குறு நாடகமும் குழு நடனங்களும் கண்கவர் வண்ணம் அமைந்தன. இரு பெற்றோர் சாரதா கிண்டர்கார்ட்டன் பள்ளிக்கு நன்கொடை வழங்கினர். அதை பள்ளி சார்பில் சுவாமி சத்ய லோகானந்தர் பெற்றுக் கொண்டார்.

மிஷன் தலைவர் சுவாமி விமோக்சானந்தா மகராஜ் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறார்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார். ஸ்ரீ கிருஷ்ணரோடு தொடர்புடைய மயில் வண்ண ரங்கோலியாக வரையப்பட்டிருந்தது அனைவரது பாராட்டையும் பெற்றது. சாரதா ஹிந்துயிசம் வகுப்பு மாணவர்களின் உற்சாகத்தையும் ஒத்துழைத்த பெற்றோரையும் அனைவரும் பாராட்டினர். நிறைவாக பங்கேற்றோர்க்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சரவண பவன், சைவ உணவகம், பங்சார், கோலாலம்பூர்

சரவண பவன், சைவ உணவகம், பங்சார், கோலாலம்பூர்...

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்...

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்...

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)