கொரியாவில் தமிழ்ப்பணியாற்றும் தமிழர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரியாவில் தமிழ்ப்பணியாற்றும் தமிழர்கள்

செப்டம்பர் 21,2017  IST

Comments

ஹாங்காங்: கொரியாவில் டேஜோன் நகரில் 10 ஆண்டு காலமாக வசித்து வருபவர் ரத்ன சிங். இவர் டேஜோன் நகரில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறார். குழந்தைகளுக்கான தமிழ் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழுக்கான தமிழ் வர்ச்சுவல் அகாடமியைப் பற்றி அறிந்ததும், அதற்காக மாணவர்களைத் தயார்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சியோல் நகரில் கடந்த 4 ஆண்டாக வசித்து வருபவர் சுரேஷ்குமார். கொரியா மொழி மூலம் தமிழைக் கற்றுக் கொள்வதற்கான நூலை எழுதி கொரியா பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட்டிருக்கிறார். வேதியல் பேராசிரியராக பணியாற்றும் இவர் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கொரியாவில் உள்ள தமிழர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இவர், கொரியாவில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். கொரியாவுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே உள்ள உறவை விளக்கி பல மேடைகளில் பேசி வருகிறார்.



தமிழகத்தை விட்டு கடல் கடந்து சென்று வாழும் தமிழர்கள், தமிழில் ஆர்வம் காட்டி, அதை இளைய தலைமுறையினருக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் தமிழை எடுத்துச் செல்வதிலும் அக்கறை காட்டி வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜனவரி 21 ம் தேதி கவிதை நூல் வெளியீட்டு விழா...

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8

ஜனவரி 20 ம் தேதி சங்கப்பலகை அமர்வு 8...

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா

ஜனவரி 14 ம் தேதி புரூனேயில் பொங்கல் விழா...

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா

ஜனவரி 20 ம் தேதி அழகப்பா கல்லூரி முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர் தொடக்கவிழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us