ஞானலிங்கேச்சுரத்தில் ஞானாம்பிகை அன்னை திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஞானலிங்கேச்சுரத்தில் ஞானாம்பிகை அன்னை திருவிழா

செப்டம்பர் 24,2017  IST

Comments

 

சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கடந்த 20. 09. 2017 புதன்கிழமை முதல் 30. 09. 2017 சனிக்கிழமை வரை ஒன்பானிரவு (நவராத்திரி) நோன்பு திருக்கொடியேற்றத்துடன் அன்னையின் பெருவிழாவாக நோற்கப்படுகிறது. 29. 09. 2017 வெள்ளிக்கிழமை பேர்ன் ஐரோப்பாத்திடலில் அன்னையின் திருத்தேர் விழாவும் மறுநாள் 30. 09. 2017 சனிக்கிழமை வெற்றித்திருநாளும் (விஜயதசமி) மிகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கருவறையில் தெய்வத் தமிழ் ஒலிக்கும், செந்தமிழ்த்திருமறையில் வழிபாடு நடக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுர்த்தில் ஒன்பானிரவு (நவராத்திரி) திருவிழாக்காலத்தில் அருட்சுனையர்களாக விழாவினை நடாத்துவதும், திருவுலா வரும்போது இறைதிருவுருவத்தினைத் அன்னையர்களே தாங்கி வருவதும் இக்கோவில் சிறப்புக்களில் ஒன்றாகும். இச்சிறப்புக்களில் மேலும் ஒரு சிறப்பாக 23. 09. 2017 சனிக்கிழமை 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகளை அன்னையாகக் கருதி வாலை அம்மன் வழிபாடு (பாலதிரிபுரசுந்தரி வழிபாடு) சிறப்பாக நடைபெற்றது. பலபத்துக் குழந்தைகள் இச்சிறப்பு வழிபாட்டில் உலகன்னைத் திருவுருவினை வாலை அம்மனாக ஏற்று வந்தனர். இவ்வழிபாட்டில் பங்கெடுத்த அனைத்துப் பிள்ளைகளின் பெயரையும் சீட்டில் எழுதி, ஒரு பிள்னை முப்புரம் எரிசெய்த மூவுலாகாளும் அன்னையின் வடிவாகத் (பாலதிரிபுரசுந்தரியாக) தெரிவுசெய்யப்பட்டார்.

திருக்கோவில் அருட்சுனையர்கள் அன்னைக்கும் அன்னையின் வடிவமாகத் திகழ்ந்த கள்ளமற்ற குழந்தையின் உள்ளத்தில் எழுந்தருளிய அறியமுடியா மறைபொருளை பாடிப்பணிந்து நிறைவழிபாடு ஆற்றினர். செந்தமிழால் அருட்சுனையர்கள் ஓதிய பாடற்பொருள் இறைவழிபாட்டுப் பொருள் உரைக்க வாலையம்மன் வழிபாடு நிறைந்தது. பல்சிறப்பு அருளுணவு படைத்து அடியார்களுக்கு மகேச்சுர வழிபாடாக அளித்து வழிபாடுகள் அனைத்தும் நிறைவுற்றன.

- தினமலர் வாசகர் தில்லையம்பலம் கீர்த்தி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us