லெட்ஸ் டாக் இன் டமிள்: ஹாங்காங் வானொலி புதுமை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லெட்ஸ் டாக் இன் டமிள்: ஹாங்காங் வானொலி புதுமை

அக்டோபர் 12,2017  IST

Comments

ஹாங்காங்: லெட்ஸ் டாக் இன் டமிள் என்பது ஹாங்காங் RTHK CIBS வானொலியில் தமிழுக்காக 13 வாரம் ஒதுக்கியுள்ள தமிழ் நிகழ்ச்சிக்கான தலைப்பு.சென்ற முறை இதே தலைப்பில் ஹாங்காங்கின் பல்வேறு கூறுகளை சொன்ன இந்த நிகழ்ச்சியில் இந்த முறை திருக்குறளை மையமாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி வரவிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் எப்படி அன்றாட வாழ்வில் இன்றும் இரண்டறக் கலந்திருக்கிறது என்ற கலந்துரையாடல் வாராவாரம் ஒவ்வொரு தலைப்பில் ஒலிபரப்பாகவிருக்கிறது.முதல் வாரம் திருக்குறள் ஒரு தெய்வீக அனுபவம் என்ற தலைப்பில் துவங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் குறள் நேரம் என்ற பொது மக்களும் ரசிகர்களும் பங்கெடுத்துக் கொள்ளும் பகுதியும் ஒலிபரப்பாகும்.இது திருக்குறள் சொல்லி பொருள் சொல்லும் தமிழ் வகுப்பு போல இல்லாமல் அவ்வப்போது இசையுடன் கூடிய ஜனரஞ்சக நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இதன் ஒலிப்பதிவு நடந்து கொண்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து ரமேஷ் வைத்யா மற்றும் ஹாங்காங் வானொலி குழுவினர் ராம், அருண், சுந்தர், தீபா, சுபா, கவிதா, பானு, ராதா கவிதா, திருப்பதி, சுதா போன்றவர்களுடன் இணைந்து மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு தயாரித்து வருகிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக ஒரு நேபாள இசைக் கலைஞர் நாகேந்திர ஷ்ரெஷ்டா என்பவர் இசையமைக்க , மெட்டுக்கு ராம் பாட்டெழுத, நாராயண மூர்த்தி மற்றும் ராதா மணியுடன் இணைந்து டைட்டில் பாடலை தயாரித்திருக்கிறார்கள்ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக இவ்வாறு தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.இந்த நிகழ்ச்சியை 14ந் தேதி அக்டோபர் முதல் சனிக்கிழமை தோறும் மாலை 8 மணி முதல் 9 மணி வரையில் (ஹாங்காங் நேரப்படி) ஹாங்காங்கில் சாதாரண வானொலியில் AM621 என்ற அலைவரிசையில் கேட்கலாம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த வலைதளத்திற்கு சென்று
www.rthk.hk/radio/pth/programme/p0329_lets_talk_in_tamil_2
LIVE என்ற பொத்தானை அழுத்தி ஹாங்காங் நேரப்படி நேரலையில் கேட்கலாம். விடுபட்டுப் போன நிகழ்ச்சிகளை
letstalkintamil.blogspot.hk
என்ற வலைதளத்திலும் கேட்கலாம்.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 21 ம் தேதி கேசி தமிழ் மன்றத் தைப்பொங்கல் கொண்டாட்டம்...

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்

ஜனவரி 13 ம் தேதி ஜெர்மனியில் மார்கழி உற்சவம்...

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா

டிசம்பர் 24 ம் தேதி தமிழ் இளைஞர் அணி விளையாட்டு கழக புத்தாண்டு கலைவிழா...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

Advertisement
Advertisement

குமரி மீனவர்களை சந்திக்கிறார் மோடி

சென்னை: வரும் 19ம் தேதி குமரி மாவட்ட மீனவர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ...

டிசம்பர் 16,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)