ஜிஎஸ்டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜிஎஸ்டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

அக்டோபர் 12,2017  IST

Comments

  

துபாய்: துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் நிர்வாகிகள் அதன் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமையில் இந்திய துணை தூதரிடம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். துபாய் இந்திய துணை தூதராக விபுல் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவரை ஈமான் கல்சுரல் செண்டரின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், பொருளாளர் அப்துல் உபூர் மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஈமான் அமைப்பு செய்து வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார். மேலும் இந்திய துணை தூதரகம் மேற்கொண்டு வரும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஈமான் அமைப்பு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் அமீரகத்தில் இருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊரில் வசித்து வரும் உறவுகளுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எவ்வித வரியும் இன்றி அனுப்பி வந்தனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வரிவிதிப்பு இருந்து வருகிறது.

இதன் காரணமாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே வரிவிதிப்பை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைக் கவனமுடன் கேட்ட இந்திய துணைத் தூதர் விபுல், இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ஈமான் அமைப்பு சார்பில் இந்திய துணை தூதர் விபுல் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய துணை தூதரகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுமதி வாசுதேவ், ராஜு உள்ளிட்டோரையும் சந்தித்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)