துபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊர் வந்தது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊர் வந்தது

அக்டோபர் 23,2017  IST

Comments

துபாய் : துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ஜோ பிரசாந்த் (வயது 25). இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் துபாயில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை பெற முயற்சி செய்தனர். இதனை தெரிந்து கொண்ட கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி. ஷேக், ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசினை தொடர்பு கொண்டார்.

அவர் ஈமான் கலாச்சார மையத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் தெரிவித்தார். அதனையடுத்து ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா அவர்களின் வழிகாட்டுதலுடன் ஜோ பிரசாந்த் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அமீரக அரசு மற்றும் இந்திய துணை தூதரகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உடல் சொந்த ஊருக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் 21.10.2017 அன்று இரவு 11.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் ஈமான் கல்சுரல் செண்டரின் மதம் கடந்த மனித நேயப் பணிகளுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் பெயரில் இறந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் செந்தமிழ் செல்வன், பாபு, உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு அளித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா

பிப்ரவரி 3 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி பரிசல் வழங்குவிழா...

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி

ஜனவரி 28 ல் சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி...

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!...

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

மீண்டும் ஆய்வுக்கு செல்வேன் : கிரண்பேடி

புதுச்சேரி : சட்ட ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அறிய தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் மீண்டும் ஆய்வுக்கு செல்ல உள்ளதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் ...

நவம்பர் 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us