ஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட்

அக்டோபர் 23,2017  IST

Comments

 

ஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட்

மஸ்கட் சுல்தான் அரண்மனை அருகே சிப் விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில். மஸ்கட்டில் நீண்ட காலத்திற்கு முன் குடியேறிய குஜராத்திகளால் கட்டப்பட்டது இந்த கோயில். இந்த கோயில் 109 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பின்னர் பக்தர்களின் வசதிக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு, 1999 ல் மீண்டும் கட்டப்பட்டது.


சிவன் கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஆதி மோதீஸ்வரர் மகாதேவ் கோயில், ஸ்ரீ மோதீஸ்வரர் மகாதேவ் கோயில், ஸ்ரீ ஹனுமன்ஜி கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
திறந்திருக்கும் நேரம்இந்த கோயில் ஆண்டு முழுவதும் ஞாயிறு முதல் வெள்ளி வரை காலை 05: 30 மணி முதல் பகல் 11: 30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 05:30 மணி முதல் பகல் 11: 30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வார நாட்களில் சுமார் 400 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், மகா சிவராத்திரி, தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் 15 ஆயித்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.


இந்த கோயிலில் மகேஷ் ராவல், சங்கர் நாராயண் ராவ், அல்பேஷ் ஜோஷி என்ற 3 அர்ச்சகர்கள் இந்து மத முறைப்படி பல்வேறு பூஜைகளையும் பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றனர். அறக்கட்டளை மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்து கோயில் நிர்வாகத்தால் இந்த மஸ்கட் ஸ்ரீ சிவன் கோயில் நிர்வகிக்கப்படுகிறது. ஓமனில் நீண்ட காலத்திற்கு முன் குடியேறிய மஸ்கட் பன்யான் வர்த்தகர்கள் சமுதாயத்தின் ஆதரவில் இந்த இந்து கோயில் நிர்வாக அமைப்பு ஒரு தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.கோயில் விழாக்கள்ஸ்ரீ சிவன் கோயிலில், வசந்த பஞ்சமி (மஸ்கட் கோயில் வருடாந்திர உற்சவம்), மகா சிவராத்திரி ( சிவபெருமான் பிறந்தநாள்), ராமநவமி ( ராமர் பிறந்தநாள்), ஹனுமன் ஜெயந்தி ( ஹனுமன் பிறந்த நாள்), கணேசர் விழா ( விநாயகர் தொடர்பான விழாக்கள்) ஆகிவை நடைபெறுகின்றன.


மஸ்கட் சிவன் கோயில் தரிசன நேரங்கள்


ஞாயிறு முதல் வெள்ளி வரை ( திங்கள் நீங்கலாக)


காலை 6 மணி முதல் 11: 30 வரை; ஆரத்தி- காலை 06:30 மணி


மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை; ஆரத்தி- இரவு 7 மணி


திங்கள் மற்றும் சனி


காலை 05: 30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; ஆரத்தி- காலை 6 மணி


மாலை 5 மணி முதல் இரவு 09:30 மணி வரை; ஆரத்தி- இரவு 7 மணி


மகா சிவராத்திரி: காலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்...

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்...

துபாயில் அரை மாரத்தான் போட்டி

துபாயில் அரை மாரத்தான் போட்டி ...

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு ...

Advertisement
Advertisement

சிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக திருச்சி மதுவிலக்குப்பிரிவு டிஎஸ்பி ஜீவானந்தத்தை சென்னையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது ...

நவம்பர் 15,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)