மலேசியாவில் உலக அமைதி தினப் பெருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் உலக அமைதி தினப் பெருவிழா

நவம்பர் 13,2017  IST

Comments

“ எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பேணி ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்குவோம் “ என்று மலேசியாவில் நடைபெற்ற உலக அமைதி தினப் பெருவிழாவில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் உரையாற்றினார்.

ஈப்போ நகரில் விசேஷமாக அமைக்கப் பட்டிருந்த பிரம்மாண்ட அரங்கில் மத – இன – மொழி வேறுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டு அமைதிப் பேரணியில் இணைந்தனர். இஸ்லாமிய சமுதாயத்தைச்சேர்ந்த பெண்கள் ஏராளமாகக் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இம்மாபெரும் அமைதிச் சங்கமத்தில் மகாமகரிஷி மேலும் உரையாற்றுகையில், “ அன்புநெறியை வலியுறுத்துவது இந்து சமயம். கருணை நிலைக்குக் கொண்டு செல்லுவது கிறித்துவம். இஸ்லாம் என்றாலே அமைதி. மன்னிக்கின்ற மனப்பாண்மை கொண்டது இஸ்லாம். எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் போற்றி ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பேணி ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்குவோம். எல்லா மதங்களும் – மார்க்கங்களும் அமைதியை – ஜீவகாருண்யத்தையே வலியுறுத்துகின்றன – பிரபஞ்ச அமைதியையே வற்புறுத்துகின்றன

பூமித் தாயைக் காப்பாற்றுவோம்

இன்று மனித தர்மம் குறைந்து காணப்படுகிறது. பூமித்தாய் நோயுற்றிருக்கிறாள். நமது அன்னை பூமியைக் காப்பாற்றுவது நமது கடமையல்லவா ? இந்த பூமியைப் பாதுகாக்கப் பிறந்தவர்கள் நாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே பிறந்த மூத்த குடிமக்களாகிய நாம் நமது கடமையை மறக்கலாகாது. புவி வெப்பம் பல மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எரிமலைகள் இடம் பெயர்ந்திருக்கின்றன. உலகில் அமைதிச் சூழுலை உருவாக்கு வேண்டிய அவசர – அவசிய நிலையில் உள்ளோம். இனியொரு ஷிரோஷிமா வேண்டாம். உயிரிழப்புகள் வேண்டாம். அவல நிலைக்கு முடிவு கட்டுவோம். ஒவ்வெருவருக்குள்ளும் உள்ள அமைதியை – சந்தோஷத்தை வெளிப்படுத்துவோம். அது வெளியில் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. மறைந்திருக்கின்ற அந்த தூய – தெய்விக உணர்வை வெளிக் கொணரவே இவ்விழா என மகரிஷி குறிப்பிட்டார். பசிப்பிணி நீங்க வேண்டும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கச் சபதம் மேற்கொள்ளுவோம் எந்நாட்டு விளை பெருளானாலும் எல்லோரும் துய்க்க வேண்டும் . ஓருலக இறையாட்சி மலர வேண்டும். ஒரே இறை – ஒரே இனம் – ஒரே நாணயம் என்ற நிலை ஏற்பட வேண்டும். மூன்று மொழி பேசினாலும் இம்மண்ணின் மைந்தர்கள் “ சத் மலேசியா “ என்ற உணர்வோடு விளங்குகிறார்கள் இம்மலேசியா மண்ணிலிருந்து துவங்கும் அமைதி அலைகள் நிச்சயம் பிரபஞ்ச அமைதியைத் தோற்றுவிக்கும் என குறிப்பிட்டார்.

538.6 கி.மீ., தூர தொடர் ஓட்டம்

முன்னதாக ஜோகூர் பாருவிலிருந்து 538.6 கி மைல் தூரம் தொடர் ஓட்டமாக மலாக்கா – செரம்பான் – ஷா ஆலம் வழியாக மலேசிய உலக சமாதான ஆலய மேனாள் தலைவர் ராமன் தலைமையில் எடுத்து வரப்பட்ட உலக அமைதி தின ஞான ஜோதி மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. விழாவில் இந்தியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். மலேசியா உலக அமைதி தின விழாக்குழுத் தலைவர் டாக்டர் அமீர் – கேப்டன் ரவி – கிறித்துவ தேவாலயத்தைச் சேர்ந்த பாதர் சையத் – வாலை சித்தர் – மோகன் ஷான் – சிவாச்சாரியார்கள் – சீக்கிய மதத் தலைவர்கள் – மலேசிய அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் சரசிஜெம் நாயர் – உலக சமாதான ஆலயப் பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் தமிழ் – ஆங்கிலம் – மலாய் மொழியில் நெறிப்படுத்தப்பட்டன. ‘ஒருங்கணைப்போம் – ஒருங்கிணைவோம் . ஒன்றுபடுவோம் – ஒன்றுபடுத்துவோம் . அன்னை பூமியைக் காப்போம் “ என்ற முழக்கத்தோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் மலேசியாவில் நவம்பர் 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு உலக அமைதி தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருவதோடு உலக முழுவதுமுள்ள உலக சமாதான ஆலய மெய்யுணர்வாளர்கள் அவ்வந்நாட்டு நேரப்படி 11.11 மணிக்கு உலக அமைதி தினத்தை அனுஷ்டித்து பிரபஞ்சம் முழுவதும் அமைதி அலைகளை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!

டிசம்பர் 23 ல் வணக்கம் ஐரோப்பா- நெஞ்சம் மறக்குமா...!...

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்

டிசம்பர் 10 ல் எஸ்ஆர்எஸ். மாணவர்களின் இசை கொண்டாட்டம்...

டிசம்பர் 1 ம தேதி குவைத்தில் பிரமாண்ட இந்திய இசை நிகழ்ச்சி

டிசம்பர் 1 ம தேதி குவைத்தில் பிரமாண்ட இந்திய இசை நிகழ்ச்சி...

ஜனவரி 20 ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழா

ஜனவரி 20 ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க பொங்கல் விழா...

Advertisement
Advertisement

கும்மிடிப்பூண்டி : மாணவிகள் வீடு திரும்பினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம் ...

நவம்பர் 24,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us